Breaking News

நாடு முழுக்க பென்சன் முறையில் மாற்றம்.. இதை நோட் பண்ணுங்க.. மத்திய அரசு அனுப்பிய மெசேஜ்!

 


தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) பங்களிப்புகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் அலுவலகக் குறிப்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். இது தற்போது மாற்றப்படுகிறது. ஏப்ரல் 1, 2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு NPS பொருந்தும்.

வெளியிடப்பட்டு உள்ள NPS பங்களிப்பு வழிகாட்டுதல்கள் என்ன?

NPSக்கான மாதாந்திர சம்பள பங்களிப்பு 10% ஆகும். இருப்பினும், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலங்களில், ஊழியர்கள் தங்கள் பங்களிப்பைத் தொடருவதா வேண்டாமா என்பதை உறுதி செய்யலாம். யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும். பணிக்கு வராத அல்லது ஊதியம் இல்லாத விடுப்பில் இருக்கும் பணியாளர்கள் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பென்சனில் பங்களிக்கத் தேவையில்லை.

பிற துறைகள் அல்லது பிற நிறுவனங்களுக்குப் deputation பணியில் உள்ள பணியாளர்கள் எப்போதும் போல NPS க்கு பங்களிக்க வேண்டும். அவர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்பதால் NPS க்கு பங்களிக்க வேண்டும். நன்னடத்தையில் உள்ள பணியாளர்களும் கட்டாயமாக NPS க்கு பங்களிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு: இப்போது ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் 50 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் பென்ஷனாக வழங்கப்படும். ஆனால் அது மட்டுமல்ல.. கூடுதலாக.. பென்சனுடன் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும். அதாவது தற்போது உள்ள 50% அகவிலைப்படி என்பது அடிப்படை ஊதியத்தில் பாதி ஆகும். அதாவது 25 ஆயிரம்.

எனவே மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் மொத்தமாக அரசு ஊழியருக்கு பென்ஷனாக வழங்கப்படும். இதை அடிப்படையாக வைத்து மற்ற வருமானத்திற்கு கணக்கிடலாம்.

எப்போது தொடங்கும்: அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும்.

'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும்' 'தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும்' உள்ள வித்தியாசம்:

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் . மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.

No comments