Breaking News

உருவாகிறது டானா புயல்! எச்சரிக்கை கொடுத்த இந்திய வானிலை மையம்!

 

வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

அதாவது, வரும் 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது.

அதன்பிறகு, இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இந்த புயலுக்கு “டானா” எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கிச் செல்லும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாகத் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கம் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதே சமயம், ஒடிசா பக்கத்தில் புயல் கரையைக் கடப்பதால் அந்த பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசாவின் பல இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை (20 செ.மீ.) பதிவாகலாம், சில இடங்களில் மிக அதிக மழை (20 செ.மீ. முதல் 30 செ.மீ.) வரை இருக்கலாம். புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகமும் மழையும் அதிகபட்சமாக இருக்கும்.

அதாவது, ஒடிசா கடற்கரையில் காற்றின் வேகம் அக்டோபர் 23 மாலை முதல் மணிக்கு 60 கிமீ வேகத்தில் 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் அக்டோபர் 24 இரவுக்குள் மணிக்கு 100-120 கிமீ வேகத்தை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments