வீடு, வாகன கடன் கட்டுவோரின் கவனத்திற்கு. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5% ஆகவே நிலைத்து இருக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் குறிப்பாக கடனாளர்கள் சற்று நிம்மதியாக உள்ளனர். கடந்த பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு, இந்திய பொருளாதாரத்தை நிலைத்த நிலையில் வைத்திருக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கியால் எடுக்கப்பட்டது. இது வீட்டுக் கடனாளர்களுக்கும் வாகனக் கடனாளர்களுக்கும் நன்மையானதாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் வட்டி விகிதங்கள் அதிகரிக்காததால் அவர்களின் மாத தவணை மாற்றமின்றி இருக்கும்.
No comments