அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; ரூ.35000 சம்பளம்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2024
Project Associate - II
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.E/B.Tech in Computer Science and Engineering / Information Technology/ Cyber Security படித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dr. R. Arockia Xavier Annie, Associate Professor and Principal Investigator ISEA Phase III project, Department of Computer Science and Engineering, College of Engineering Guindy, Anna University, Chennai - 600025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
No comments