Job Offer : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. மாதம் ரூ.24,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வேலையின்மை ஒரு மாபெரும் பிரச்னையாக உள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்பு இருந்தாலும் அது மக்களுக்கு தெரிய வருவதில்லை.
இந்த நிலையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு நீங்கள் தகுதி உடையவர்கள் என்றால் உடனே விண்ணப்பியுங்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு என்ன?
நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது 01.07.2024 தேதியின் படி குறிப்பிட்ட வயதிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி BC பிரிவை சேர்ந்தவர்கள், 18 முதல் 34 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். MBC பிரிவை சேர்ந்தவர்கள், 18 முதல் 34 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். மேலும், SC பிரிவை சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 37 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி என்ன?
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
- நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science படிப்பில் சான்றிதழ் பெர்றவராக வேண்டும்.
- இதேபோல உயிரியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வனவிலங்கு உயிரியல், விலங்கு அறிவியல், விலங்கு உயர் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஎச்டி அல்லது முதகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி 2 ஆண்டுகள் அனுமவமும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளுக்கான சம்பள விவரம்
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 7வது ஊதியக் குழுவின்படி மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல நூலகர் மற்றும் காப்பாளர் பணிகளுக்கு மாதம் ரூ.7,700 முதல் ரூ.24,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உயிரியலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000 சம்பளமாக வழங்கப்படு என்பது குறிப்பிடத்தக்கது.
பணிகளுக்கு தேர்வு செய்யபப்டும் முறை
இந்த மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஒப்பந்த முறையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதால், விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் முறை குறித்து எந்த வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SSC GD Recruitment: 10ஆம் வகுப்பு தேர்ச்சியா? மாதம் ரூ.69,000 சம்பளம்.. ஈஸியா அப்ளை பண்ணலாம்.. செக் பண்ணுங்க!
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்
மேற்குறிப்பிட்ட இந்த பணிகளுக்கு தகுதியுடையவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். தொழில்நுடப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10.10.2024 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க 18.10.2024 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரியலாளர் பணிக்கு விண்ணப்பிக்க 5.10.2024 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments