Breaking News

SBI பேங்க் Vs போஸ்ட் ஆபீஸ்.. 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக லாபம் தருவது யார் தெரியுமா?

 


பிக்சட் டெபாசிட்கள் (FD) ஆபத்து இல்லாத முதலீட்டை தேடும் முதலீட்டாளர்களுக்கு பிடித்தமான ஒன்று. இந்த பிக்சட் டெபாசிட்கள் வங்கிகளிலும் வழங்கப்படுகின்றன.
தபால் அலுவலகங்களிலும் வழங்கப்படுகின்றன. எந்த முதலீட்டாளரானாலும் சரி எங்கு அதிக வருமானம் இருக்கிறதோ? அங்கு தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்தப் பதிவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தையும், போஸ்ட் ஆபீஸ்களில் பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து எங்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.SBI பேங்க் வழங்கும் பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்கள்: SBI பிக்சட் டெபாசிட்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்தை வழங்குகிறது.

முதலீட்டாளர்கள் ரூ. 5 வருட வரி-சேமிப்பு FD-இல் முதலீடு செய்யும் போது பிரிவு 80C இன் கீழ் 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கு கிடைக்கும். தற்போது SBI பேங்க் 5 வருட பிக்சட் டெபாசிட்டுக்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்ரூ.1 லட்சம் முதலீடு: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அதற்கு 6.5% வட்டி விகிதம் வழங்கப்பட்டால் 5 வருட முதலீட்டு காலத்தில் வட்டியாக உங்களுக்கு 38,042 கிடைக்கும். அப்படியானால் மொத்த முதிர்வுத் தொகை 1,38,042 ரூபாயாக இருக்கும்.ரூ.3 லட்சம் முதலீடு: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிக்சட் டெபாசிட்டில் ரூ.3 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 6.5% வட்டி விகிதத்தில் 5 வருடங்களுக்குப் பிறகு 1,14,126 ரூபாய் வட்டி கிடைக்கும். அதற்கு முதிர்வுத் தொகையாக 4,14,126 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.ரூ.5 லட்சம் முதலீடு: அதுவே SBI பிக்சட் டெபாசிட்டில் ரூ. 5 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அதற்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1,90,210 ரூபாய் வட்டி கிடைக்கும். அப்படியானால் மொத்த முதிர்வு தொகை ரூ.6,90210 ரூபாயாக இருக்கும்போஸ்ட் ஆபீஸ் வழங்கும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்: போஸ்ட் ஆபீஸ்களிலும் வங்கிகளை போலவே பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்படுகின்றன. பழமை வாத முதலீட்டாளர்களுக்கு இன்னமும் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து போஸ்ட் ஆபீஸ் வழங்கி வருகிறது. 5 வருட பிக்சட் டெபாசிட்களுக்கு போஸ்ட் ஆபீஸ்களில் 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இங்கு முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

என்பதை பார்ப்போம்.ரூ.1 லட்சம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ்களில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்பட்டால் 5 வருட முதலீட்டு காலத்தில் வட்டியாக உங்களுக்கு 44,995 கிடைக்கும். அப்படியானால் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.ரூ.3 லட்சம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ்களில் ரூ.3 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் 7.5% வட்டி விகிதத்தில் 5 வருடங்களுக்குப் பிறகு 1,34,984 ரூபாய் வட்டி கிடைக்கும். அதற்கு முதிர்வுத் தொகையாக 4,34,984 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.ரூ.5 லட்சம் முதலீடு: போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்டில் ரூ.

5 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2,24,974 ரூபாய் வட்டி கிடைக்கும். அப்படியானால் மொத்த முதிர்வு தொகை ரூ.7,24,974 ரூபாயாக இருக்கும்.ஆக ஒப்பீட்டளவில் பார்க்கும் போது எஸ்பிஐ பேங்கை விட போஸ்ட் ஆபீஸ்களில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இருப்பினும் எஸ்பிஐ பிக்சட் டெபாசிட்களுக்கு வரி சேமிப்பு போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. எனவே முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு தங்களுடைய நிதிநிலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

No comments