RRB NTPC 2024: ரயில்வேயில் 11, 558 காலிப் பணியிடங்கள் : விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க..!
இந்திய ரயில்வே துறையில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமானது, தொழில்நுட்பம் அல்லாத பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பம் அல்லாத வகைகளில் (NTPC) 11,558 காலியிடங்களை வாரியம் நிரப்பும் என்று RRB தெரிவித்துள்ளது.
பதவிகள்:
ஜூனியர் கிளர்க் கம் டைப்பிஸ்ட், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஜூனியர் டைம் கீப்பர், டிரெயின் கிளார்க், கமர்ஷியல் கம் டிக்கெட் கிளர்க், டிராபிக் அசிஸ்டென்ட், சரக்கு காவலர், சீனியர் கமர்ஷியல் கம் டிக்கெட் கிளார்க், சீனியர் கிளர்க் கம் டைப்பிஸ்ட், டைம் அசிஸ்டென்ட், ஜூனியர்ப் அசிஸ்டெண்ட், ஜூனியர்ப் அசிஸ்டென்ட் ஆகிய பதவிகள் இதில் அடங்கும். கீப்பர், கமர்ஷியல் அப்ரண்டிஸ் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் ஆகிய பணியிடங்களில் காலியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தின் தொடக்க தேதி: 14.09.2024
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி:
அக்டோபர் 13 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், அக்டோபர் 27 ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சில பணிகளுக்கு அக்டோபர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் நீட்டிக்கபப்ட்டுள்ளது. ஆகையால், பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள், விண்ணப்ப அறிக்கையை படித்து பார்த்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்நிலையில், ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள், ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும். https://www.rrbchennai.gov.in/
No comments