Breaking News

TNPSC Group 5A Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; தகுதி, ஊதியம், தேர்வு முறை- முழு விவரம் இதோ!

 


மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5- A (தலைமை செயலக பணி ) உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது.

இணைய வழி மூலம் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

ஊதியம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி, நிலை 16-ன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு எப்போது?

பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவை முறையே தாள் 1 மற்றும் தாள் 2 ஆக நடக்கிறது. எழுத்துத் தேர்வு முறையில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அன்று காலை முதல் தாளும் மதியம் இரண்டாவது தாளும் நடைபெற உள்ளது. மொத்தம் 35 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு நடக்க உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

குரூப் 5 ஏ தேர்வு குறித்த முழுமையான தகவல்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/Group%20V%20A%20TAMIL_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிக்கை இதோ! PDF CLICK HERE



No comments