ரெடிமேட் டிரஸ் வாங்க போறீங்களா? அதுல XL,XXL என இருக்கிறதே அதன் அர்த்தம் தெரியுமா?
ஆடைகளை வாங்க கடைக்குச் செல்லும் போது அந்த ஆடைகளில் L,XL,XXL,3XL என சைஸ்கள் இருக்கின்றனவே, அவை என்ன என்பதை இதுவரை யோசித்திருக்கிறீர்களா?
இன்னொரு முக்கியமான விஷயம் இது பொது அறிவு சார்ந்த கேள்வியாம்.
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அது போல் நாம் பார்த்து பார்த்து ஆடைகளை வாங்கி அணிந்து கொள்கிறோம். அந்த ஆடைகள் ஒவ்வொருக்கும் தகுந்தாற் போல் அளவுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே ஆடை என எடுத்தால் அதற்கு அளவு என்பது முக்கியமானதாகும்.
முன்பெல்லாம் அளவு கொடுத்து தைத்து வந்தோம். சினிமா நடிகர், நடிகைகளுக்கு இருப்பதை போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டைலர்கள் இருப்பார்கள். அவர்களிடம் நமக்கு பிடித்த டிசைன்களில், ஸ்டைல்களில் துணிகளை தைத்து கொள்வோம்.
உள்ளாடைகளை கூட தைத்து போடும் வழக்கம் இருந்தது. அதன் பின்னர் பேஷனில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக அனைத்து ஆடைகளும் ரெடிமேட்களில் கிடைக்கின்றன. அதற்கு சில சைஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். முன்பு சென்டிமீட்டரில் கொடுக்கப்பட்டிருக்கும், இல்லாவிட்டால் இன்ச் இருக்கும்.
ஆனால் தற்போது சில எழுத்துகளில் சைஸ்கள் உள்ளன. அவற்றில் s,XS,M, L, XL,XXL, 3XL, என 5 XL வரை சைஸ்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் இந்த செ.மீ முதல் இந்த செ.மீ. வரை இருந்தால் இந்த சைஸ் என இருக்கும். அதற்கேற்ப நாம் வாங்கிக் கொள்ளலாம். எல்லாம் சரி அவற்றிற்கு என்ன அர்த்தம் தெரியுமா.
S என்றால் ஸ்மால், M என்றால் மீடியம், L என்றால் லார்ஜ் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் உள்ள எக்ஸ் என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எக்ஸ் என்றால் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதாகும். பொதுவாக XL அளவில் ஏதாவது ஒரு ஆடையை எடுத்தால் அது 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும்.
அது போல் XXL சட்டைகள் அல்லது ஆடைகளை எடுத்தால் அது 46 இன்ச் கொண்டதாக இருக்கும். எனவே ஆடைகளை எடுப்பதற்கு முன்னர் உங்கள் இடுப்பு சுற்றளவு, தோள் பட்டை, மார்பளவுகளை அளந்து கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலான கடைகளில் ஆடைகளை போட்டு பார்த்து எடுக்கும் வசதி (trial) இருக்கிறது.
அதையும் நாம் செய்யலாம். எஸ் என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால் என்பதாகும். இப்படித்தான் ஆடைகளை குறிப்பிடுகிறார்கள். இதை தெரிந்து கொண்டு நீங்கள் ரெடிமேட் ஆடைகளை அணியலாம்.
No comments