Breaking News

தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்..10 ம் வகுப்பு தகுதி தான்.. நோ எக்ஸாம்! செம சான்ஸ் விட்றாதீங்க

 

இந்திய தபால் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

44,228 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய தபால் துறை செயல்படுகிறது. தபால் துறையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசு பணி என்பதால், கை நிறைய சம்பளம், இதர சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும் என்பதால் தபால் துறையில் வெளியாகும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வேலை தேடும் இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

தபால் துறையை பொறுத்தவரை GDS எனப்படும் பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் இன்றி பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையிலேயே பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சுமார் 44 ஆயிரம் ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தபால் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் & கல்வி தகுதி:

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 44,228 ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இடத்திற்கான உள்ளூர் மொழி படித்திருக்க வேண்டும். கணினி பற்றிய அடிப்படை அறிவு அவசியம். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தியானவர்களும் 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் இருக்கின்றன. எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இது பற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?: Branch Post Master பணிக்கு 12,000 - 29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.

ABPM/DakSevak- பணிக்கு 10,000/ - Rs.24470/- வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 15.07.2024, விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024 ஆகும்.

இந்த காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் அதாவது மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆகவே, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.gov.in/ இங்கே கிளிக் செய்யவும்.

No comments