Breaking News

இது தெரியுமா ? வெறும் 5 வருடத்தில் ரூ. 21 லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம்..!

 


பால் நிலையத்தில் ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டம் உள்ளது. தபால் நிலையங்களில் வழங்கப்படும் RD திட்டங்கள் மிகவும் பிரபலமான சேமிப்பு பிளானாகும்.

இத்திட்டம் ஃபிக்சட் டெபாசிட்கள் மற்றும் பிற நீண்ட கால திட்டங்களுக்கு மாற்றீடாக அமையும். தற்போது ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு தபால் நிலையங்களில் வருடத்திற்கு 6.70% வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் வட்டி கணக்கிடப்படும். ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கு 5 வருட கால அளவு நிர்ணயம் செய்துள்ளது தபால் துறை. ஒருவேளை இந்த கால அளவை கூட்ட நினைத்தாலும் அதற்கும் வழி உள்ளது.

ரெக்கரிங் டெபாசிட் கணக்கை 5 வருடங்களுக்கு பிறகும் தொடர வேண்டும் என நினைத்தால் கூடுதலாக 5 ஆண்டு அக்கவுண்டை நீட்டிப்பதற்காக அனுமதி கிடைக்கும். இதன் மூலமாக மொத்த கால அளவு 10 வருடங்களாக மாற்றப்படும். இத்திட்டத்தில் ஒருவர் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சமாக 10 ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு என்று எந்தவொரு வரம்பும் இல்லை.

ஒருவர் இந்த ரெக்கரிங் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 30,000 தொகையை டெபாசிட் செய்தால் 21 லட்சம் ரிட்டனாக கிடைக்கும். அதாவது முப்பதாயிரம் முதலீடு செய்யும் போது ஐந்தாண்டு மெச்சூரிட்டி காலத்திற்கு பிறகு ரூ. 21,40,074 கிடைக்கும். இதில் 6.7 சதவீதத்தில் வட்டி மட்டுமே ரூ. 3,40,974 கிடைக்கும்.

RD கணக்கில் அவசரமாக பணத்தை எடுப்பதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்..?

ரெக்கரிங் டெபாசிட் கணக்கு தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவதற்குள் பணத்தை எடுக்கலாம். அதாவது மூன்று வருடங்கள் முடிந்தால் ஐந்து வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு விதிகள் 2019-இன் படி, படிவம்-2ல் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் உங்கள் RD கணக்கு தொடங்கப்பட்ட தபால் அலுவலகத்தில் 'Premature Closure of Account' என சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

No comments