8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களின் சம்பளம் கொடுப்புணவுகளின் எதிர்பார்ப்பு என்ன?
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தம் செய்யப்படும்.இதற்காக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய குழு என்பது உருவாக்கப்படும்.
7-வது ஊதிய குழுவிற்கான காலம் முடிவடைய இருக்கும் நிலையில் விரைவில் 8-வது ஊதிய குழு உருவாக்கப்பட இருக்கிறது.
ஊதிய
குழுவின் பணி என்னவென்றால், நடப்பு நிதி நிலவரங்களின் அடிப்படையில் மத்திய
அரசு ஊழியர்களின் சம்பள விபரங்களை புதுப்பிப்பதாகும். விலைவாசி ஏற்றம்
நிதி நிலைகள் குறித்து ஆய்வு செய்து இந்த புதுப்பிப்புகள் செய்யப்படும்.
தற்போது
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி சம்பளம்
மற்றும் கொடுப்புணவு மற்றும் பென்ஷன் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏழாவது ஊதிய குழு பரிந்துரைக்கான காலாவதி தேதி டிசம்பர் 31, 2025 உடன்
முடிவடைய இருக்கிறது.
ஊதியக்குழு காலம்:
டிசம்பர் 2025 உடன் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகள் காலாவதி ஆகி 2026 ஜனவரி முதல் புதிய ஊதிய குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படவேண்டும் என்பதால் ஜனவரி 2025-ல், 8 ஆம் ஊதிய குழு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அந்த ஊதிய குழு பரிந்துரைகள் டிசம்பர் மாதத்திற்குள் வரும் மற்றும் ஜனவரி 2026 முதல் அதை செயல்பட்டு கொண்டு வர முடியும்.
முக்கிய எதிர்பார்ப்பு
ஃபிட்மெண்ட் காரணி என்றால் என்ன?
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம்
எடுத்துக்காட்டாக சம்பள நிலை ஒன்றில் உள்ளவர்கள் இப்போது ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின்படி ரூ.18,000 பெற்று வருகின்றனர். இது எட்டாவது ஊதிய குழுவில் ரூ.21,600 ஆக மாறலாம்.
அதேபோல சம்பள நிலை 18 ல் உள்ளவர்கள் தற்போது அடிப்படை சம்பளமாக 2.5 லட்சம் பெற்று வருகின்றனர். அது எட்டாவது ஊதிய குழுவில் 3 லட்சமாக உயர வாய்ப்புள்ளது.
இதர படிகள்
No comments