தபால் துறையில் வரவிருக்கும் மெகா வேலை வாய்ப்பு அறிவிப்பு.. தயாராகுங்க மக்களே!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவாக் எனப்படும் கிராம அஞ்சலக சேவை பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
கிராமின்
டாக் சேவாக் பணியிடங்களில் சேர்வதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு ,விண்ணப்ப
கட்டணம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த
செய்தி தொகுப்பில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி
மத்திய
அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பள்ளி கல்வி
வாரியத்திடம் இருந்து கணிதம் மற்றும் ஆங்கிலத்தை பாடமாக படித்த பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு தகுதி பெறுவர்.
சம்பளம்
கிராமின் டாக் சேவாக் பணியிடங்களின் அறிவிப்புப்படி
- உதவி கிளை போஸ்ட் மாஸ்டருக்கு மாத ஊதியமாக 10,000 முதல் 24,470 ரூபாய் வரை வழங்கப்படும்.
- கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு ₹ 12000 முதல் ₹29,380 வரை கிடைக்கும்
வயதுவரம்பு
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதில் பூர்த்தி அடைந்தவர்களாகவும் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்
- ஒதுக்கீடு உள்ள பிரிவினர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு தொடர்புகள் உண்டு.
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும்,
- எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது வரம்பு தளர்வு உண்டு.
தேர்வு முறை
விண்ணப்பிக்கும்
நபர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல்
தயாரிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்பிற்கு
அழைக்கப்படுவர் அதன் பிறகு இறுதி பட்டியல் வெளியிடப்படும்
No comments