Breaking News

கூகுள் மேப்பில் உங்களுக்குப் பிடித்த இடங்களை சேமிப்பது எப்படி?- விவரம்

 


யணங்களைத் திட்டமிடும்போது கூகுள் மேப்பில் இருப்பிடங்களைச் சேமிப்பதன் மூலம் உங்கள் நேரத்தையும், முயற்சியையும் மிச்சப்படுத்தலாம்.
உங்களுக்குப் பிடித்த உணவகங்கள், நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள் அல்லது நீங்கள் சென்ற இடங்கள் ஆகியவற்றை தேடுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் அல்லது மறந்தும் போகலாம்.

உதாரணமாக, பயணத்தின்போது நீங்கள் ஒரு உணவகத்திற்கு சென்று அது பிடித்துப் போனால், மீண்டும் அந்த இடத்தை கண்டுபிடிப்பது கடினமாகும். எனவே இந்த இடங்களை எளிதாகவும், விரைவாகவும் கண்டுபிடிக்க கூகுள் மேப்ஸ் அதன் எளிமையான 'சேவ்' அம்சத்தை பயன்படுத்தி, நீங்கள் சேமித்த அனைத்து இடங்களின் பட்டியலை உருவாக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டெஸ்க்டாப்பை பயன்படுத்தி கூகுள் மேப்பில் இருப்பிடத்தை எவ்வாறு சேமிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

டெஸ்க்டாப்:

1. உங்கள் வெப் பிரௌசரில் (https://maps.google.com/) கூகுள் மேப்பை திறக்கவும்.

2. நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தைக் கண்டறியவும். சேர்ச் பாரில் பெயரை தேடவும் அல்லது வரைபடத்தை பெரிதாக்கி விரும்பிய இடத்தை கிளிக் செய்யவும்.

3. மேப்பில் இடத்தின் பெயர் அல்லது மார்க்கரில் கிளிக் செய்யவும். இது இடத்தைப் பற்றிய தகவலுடன் ஒரு பாப்-அப் விண்டோ திறக்கும்.

4. இடத்தின் முகவரிக்கு கீழே அல்லது பாப்-அப் விண்டோவில் உள்ளே "சேவ்" என்ற பட்டனைக் காணவும்.

5. "சேவ்" என்பதை கிளிக் செய்து, இடத்தை சேமிக்க ஒரு பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஏற்கனவே உள்ள பட்டியலைத் தேர்ந்தெடுக்கலாம் ("பிடித்தவை" அல்லது "போக விரும்புவது" போன்றவை அல்லது "புதிய பட்டியல்" என்பதை கிளிக் செய்வதன் மூலம் புதிய பட்டியலை உருவாக்கலாம்.

: 28 மணி நேரம் வரையிலான பேட்டரி லைஃப்... சிறப்பம்சங்களுடன் இயர்பட்ஸ் அறிமுகம்... விலை எவ்வளவு?

மொபைல் (ஆண்ட்ராய்டு / ஐபோன்):

1. உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டில் கூகுள் மேப் ஆப்பை திறக்கவும்.

2. நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தைத் தேடுவதன் மூலமோ அல்லது மேப்பில் பிரௌஸ் செய்வதன் மூலமோ கண்டுபிடிக்கவும்.

3. விவரங்கள் பக்கத்தை திறக்க இடத்தின் பெயர் அல்லது மார்க்கரை கிளிக் செய்யவும்.

4. ஸ்கிரீனின் கீழ் பகுதியில் "சேவ்" பட்டனை காண்பீர்கள். பிறகு "சேவ்" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

5. டெஸ்க்டாப் செயல்பாடும் இதுபோன்றே இருக்கும், இடத்தைச் சேமிக்க அல்லது புதிய பட்டியலை உருவாக்க பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.

: டிஸ்ப்ளே, கேமிரா, விலை.. iPhone 16 Pro மொபைல் குறித்த முழு விவரங்கள்

கூடுதல் குறிப்புகள்:

நீங்கள் சேமித்த இடங்களின் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் 'சேவ்டு' (saved) பட்டனை கிளிக் செய்வதன் மூலம் திறக்கலாம் (பொதுவாக மொபைலில் கீழ் மெனுவில் அல்லது டெஸ்க்டாப்பில் இடது பக்க மெனுவில் இருக்கும்). இங்கே, நீங்கள் சேமித்த அனைத்து இடங்களையும் பட்டியல் மூலம் வகைப்படுத்தலாம். கூடுதல் சிறப்பம்சமாக, நீங்கள் சேமித்த இடங்களின் பட்டியலைத் திருத்த கூகுள் மேப்ஸ் உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் அவற்றை மறுபெயரிடலாம், நீக்கலாம் அல்லது பட்டியல்களுக்கு இடையில் இடங்களை நகர்த்தலாம்.

No comments