Breaking News

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்க முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை:

 


தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் இப்போதை கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி வியாழக்கிமை வருகிறது.

வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமை போன்ற வாரவிடுமுறையை ஒட்டி தீபாவளி வந்திருந்தால் பரவாயில்லையே கூடுதலாக இன்னும் இரு நாள்கள் விடுமுறை கிடைத்திருக்குமே என பலரும் கவலையில் உள்ளனர்.

குறிப்பாக, பிற ஊர்களில் வேலை பார்த்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தான் இது கூடுதல் நெருக்கடியாக அமைந்துள்ளது. எனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் முதல்-அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்த மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதி முறையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு விடுமுறை நாட்களாக உள்ளது.

எனவே, நவம்பர் 1ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையை அரசு அறிவித்தால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதனால், தீபாவளி பண்டிகையை நல்லமுறையில் கொண்டாடிவிட்டு, சொந்த ஊரில் 2 நாட்களை தனது குடும்பத்துடன் தங்கி இருந்து கொண்டாடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதோடு, பண்டிகை முடிந்து பணிபுரியும் இடத்திற்கு மீண்டும் செல்ல பஸ் வசதியும் எளிதாக கிடைக்கும். ஆகவே, நவம்பர் 1ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments