Breaking News

இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000..!! அதுவும் இந்த மாதமே!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 


களிர் உரிமை தொகை திட்டம் போல பெண்களுக்கு ரூ. 1000 மாதம் கொடுக்கும் பல திட்டங்கள் உள்ளன. அப்படி ஒரு திட்டத்தின் விரிவாக்கம் இந்த மாதம் செய்யப்பட உள்ளது.

இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதைப் போக்குவதற்காக உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னதாக துவங்கி வைத்தார்.

அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு முடித்திருந்தாலும் 'புதுமைப்பெண்' திட்டத்தில் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1000 பெறலாம் என்று அறிவிப்பு செய்தார். இந்நிலையில் தான் சென்னையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் 'புதுமைப்பெண்' திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு வழங்கப்படுகிறது?

அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.

தற்போது இந்த திட்டத்தின் விரிவாக்கம் இந்த மாதம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

No comments