உங்கள் மருத்துவ செலவுக்கு 5 லட்சம் ரூபாய் தரும் அரசின் டக்கரான திட்டம்.. கிளைம் செயல்முறை ரொம்ப ஈஸி!
எதிர்பாராத
நோய்களின் போது மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும்.
முன்னெச்சரிக்கையாக பலர் உடல்நலக் காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தாலும்,
எல்லோராலும் அதை வாங்க முடியாது.
இந்த விஷயத்தை உணர்ந்து, இந்திய அரசாங்கம் 2018-ஆம் ஆண்டில் "ஆயுஷ்மான்
பாரத் யோஜனா" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை
மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு ஆண்டுக்கு சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேல்
நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. உங்களுக்கு மருத்துவ கவனிப்பு
தேவைப்பட்டால், இந்தத் திட்டத்திலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம்
என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம், தகுதியான குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம்
வரையிலான உடல்நலக் காப்பீட்டை வழங்குகிறது.
இந்த முன்முயற்சியானது, தனியார் மருத்துவக் காப்பீட்டை வாங்க முடியாதவர்கள் கூட, நிதி நெருக்கடியின்றி தரமான மருத்துவ சேவை பெறுவதை உறுதி செய்கிறது.ஆயுஷ்மான் பாரத் கார்டு பெறுவதற்கான தகுதிகள்: மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் அட்டையின் பலன்களைப் பெற சில தகுதிகள் உள்ளன. இதன் விதிகளின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள், தொழிலாளர் அட்டை உள்ளவர்கள், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும். நீங்கள் விரும்பினால், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் தகுதியை எளிதாகச் சரிபார்க்கலாம்.ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் பயனடைவது எப்படி?:ஸ்டெப் 1: முதலில், நீங்கள் பார்வையிடும் மருத்துவமனை ஆயுஷ்மான் யோஜனா திட்டத்துடன் தொடர்புடையதா என்பதை உறுதிப்படுத்தவும். இதுபோன்ற மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் ஹெல்ப் டெஸ்க் இருக்கும், அங்கு நீங்கள் மருத்துவ காப்பீட்டிற்கான செயல்முறையைத் தொடங்கலாம்.ஸ்டெப் 2: மருத்துவமனைக்குச் சென்றதும், ஆயுஷ்மான் உதவி மையத்திற்குச் செல்லவும்.
அதன் பின் நீங்கள், உங்களுடைய அடையாளச் சான்றிதழை வழங்க வேண்டும் மற்றும் உங்கள் ஆயுஷ்மான் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். அங்குள்ள ஹெல்ப் டெஸ்க் ஊழியர்கள் உங்கள் தகுதியை சரிபார்ப்பார்கள்.ஸ்டெப் 3: ஹெல்ப் டெஸ்க் ஊழியர்கள் உங்கள் தகுதியை சரிபார்த்த பிறகு, திட்டத்தின் கவரேஜ் படி இலவச சிகிச்சையை நீங்கள் பெறலாம்.ஆயுஷ்மான் பாரத் கார்டு பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?: இதை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் செய்யலாம். ஆன்லைன் செயல்முறையைப் பற்றிப் பார்ப்போம்.ஸ்டெப் 1: பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.ஸ்டெப் 2: இப்போது உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் நம்பரைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.ஸ்டெப் 3: அதன் பிறகு ஆயுஷ்மான் பாரத் கார்டு அப்ளிகேஷன் என்பதைக் கிளிக் செய்யவும்.ஸ்டெப் 4: இப்போது உங்களிடம் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் துல்லியமாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.ஸ்டெப் 5: பதிவு செய்யும் போது, உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும், அதை என்டர் செய்யவும்.ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது தனியார் மருத்துவக் காப்பீட்டை வாங்க முடியாதவர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் உடல்நலத் தேவைகளை, எந்த வித நிதி சுமையுமின்றி பூர்த்தி செய்துக் கொள்ளலாம்.

No comments