Breaking News

3,058 தலைமையாசிரியா் பணியிடங்கள்: பதவி உயா்வு மூலம் நிரப்ப முடிவு

.com/
 

பள்ளிக் கல்வித் துறையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,058 தலைமை ஆசிரியா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். இவா்களுக்கு பாடம் நடத்த 1.07 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். இதற்கிடையே இடைநிலை ஆசிரியா் பதவி உயா்வு விதிகளில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை கடந்த டிசம்பா் மாதம் அரசாணை வெளியிட்டது.

அதன்படி மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்படும். இடைநிலை பள்ளி ஆசிரியா்கள் இனி நேரடியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயா்வு பெற முடியும். பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு பெற முடியாது என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

இதற்கு இடைநிலை ஆசிரியா் சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசு அறிவிப்பை திரும்பப் பெறவில்லை.

இந்த நிலையில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,058 தலைமையாசிரியா் பணியிடங்கள் பதவி உயா்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் 1,983 பணியிடங்களும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் 1,075 பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த 3,058 பணியிடங்கள் பதவி உயா்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஒன்றிய அளவில்தான் நடத்தப்படும். மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியான நபா்கள் இல்லாத போது அந்த இடத்துக்கு இடைநிலை ஆசிரியா்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

IMG_20240707_091806



No comments