Breaking News

ஒரு முறை முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு அட்டகாசமான வருமானம்.. ரூ. 66,600 வரை வட்டி.. ஆஹா!

 


பால் அலுவலகத்தில் கிடைக்கும் எண்ணற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் நன்மைகள் குறித்து சொல்லி மாளாது. அந்த அளவுக்கு சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இதில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் திட்டங்களில் பல கோடி மக்கள் முதலீடு செய்துள்ளனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ்களில் கிடைக்கும் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் எப்படி 60,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.வேலைக்குச் செல்வது, பணம் சம்பாதிப்பது அதன் பின் ஒரு நல்ல முதலீடு திட்டத்தில் முதலீடு செய்வது. இதுவே பணம் திரட்ட பலர் பயன்படுத்தும் முறை. ஆனால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது, உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்.முதலீடு செய்ய வேண்டும் என்றால் மாத சம்பளக்காரர்களுக்கு சற்று கடினமானதாக இருக்கலாம்.

ஏனெனில் விலைவாசி அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில் எல்லா மாதங்களிலும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய பலருக்கும் கடினமானதாக இருக்கும். இது போன்ற நேரங்களில் அஞ்சல் அலுவலகம் மாதாந்திர வருமான திட்டத்தின் மூலம் பயனடையலாம்.தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டம் (MIS) என்றால் என்ன?: அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் ஒரு வகையான சேமிப்புத் திட்டம் தான்.. "மாதாந்திர சேமிப்பு திட்டம்" இதில் ஒரு முறை முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு பிறகு வட்டி வருமானத்தை பெற முடியும்.இத்திட்டம் 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒருவர் ஒற்றைக் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் (3 பெரியவர்கள் வரை) திறக்கலாம்.

முதலீட்டாளர்கள் வெறும் 1,000 ரூபாயில் MIS கணக்கைத் திறக்கலாம். ஒரு MIS கணக்கில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம்.தபால் அலுவலக MIS திட்டத்தின் வருமானம்: MIS திட்டத்தில், ஆண்டுக்கு ரூ 66,600 உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். உதாரணமாக, நீங்கள் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் ஒரு முறை டெபாசிட் செய்திருந்தால், ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதத்தில், மாதம் ரூ.5,550 வரை வட்டி கிடைக்கும்.அதன் படி 12 மாதங்களில் மொத்தம் ரூ. 66,600 உத்தரவாதமான வருமானம் பெறமுடியும்.

இதன் மூலம் 5 ஆண்டுகளில் ரூ.3.33 லட்சம் வரை உறுதியான வருமானத்தை பெறமுடியும்.கூட்டு கணக்கு விதிகள்: MIS இரண்டு அல்லது மூன்று நபர்களை கூட்டுக் கணக்கைத் திறக்க அனுமதிக்கிறது. வருமானம் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமாக விநியோகிக்கப்படுகிறது. அதேபோல கூட்டுக்கணக்கை திறந்த அனைவரும் ஒரு விண்ணப்பத்தை வழங்கும்போது, கூட்டுக்கணக்கை ஒரே தனி நபர் கணக்காகவும் மாற்றிக் கொள்ள முடியும்.தேவையான ஆவணங்கள்: MIS கணக்கை திறக்க , உங்களுடைய ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவைத் தேவைப்படலாம்.போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தபால் நிலையங்களை பார்வையிடலாம்.

No comments