டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில்.. கேட்கப்பட்ட கடினமான உறவு முறை கேள்வி.. முடிஞ்சா பதில் சொல்லுங்க!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் நேற்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
உறவுமுறை தொடர்பான கேள்வி ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கு 94 நபர்களும், தொகுதி II இல் அடங்கிய பதவிகளுக்கு 47 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 நபர்களும். தொகுதி VA தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1163 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு: ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் நேற்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. உறவுமுறை தொடர்பான கேள்வி ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேள்வி: அதன்படி, P. G. R. S. Tand U are six mombers in a family in which there are two married couples, 7 a teaches in married to a doctor who is mother of Rand 11. the lawyer is married to P. Phas one son and one grand son Of the two married ladies one is a housewife. There is also one student and one male engineer in the family. Who among the following is the housewife?
(A) P
(C) S
(E) Answer not known
(B) Q
(D) T
P, Q. R, S, T' மற்றும் U ஆகியோர் ஒரு குடும்பத்தில் உறுப்பினர்கள். அவர்களில் இரண்டு திருமணமான தம்பதியர் உள்ளனர். 7' என்பவர் ஒரு ஆசிரியர் மற்றும் அவர் R மற்றும் U- தாயாரான மருத்துவரை மணந்து கொண்டுள்ளார். ?என்பவர் ஒரு சட்ட வல்லுநர், மேலும் அவர் Pஜ மணந்து கொண்டுள்ளார். P என்பவருக்கு மற்றும் ஒரு பேரன் உள்ளனர் இரு திருமணமான பெண்களில் ஒருவர் வீட்டில் இருப்பவர் மற்றும் அந்த குடும்பத்தில் ஒரு ஆண் பொறியாளர் மற்றும் ஒரு மாணவர் உள்ளனர். எனில் கீழ்க்கண்டவர்களில் யார் வீட்டில் இருக்கும் பெண்?
(A) P
(B) Q
(C) S
(D) T
(E) விடை தெரியவில்லை
பதில்: (A) P
No comments