ராஜ யோகம்! உங்களுக்கு ஹவுஸ் லோன் இருக்கா? வீடு கட்ட கடன் வாங்கியவர்களுக்கு.. அசத்தலான செய்தி!
வீட்டு லோனில் வட்டி வசூலிக்கும் முறையை ஆர்பிஐ மொத்தமாக மாற்றி உள்ளது. இந்த வாரம் முதல் இந்த புதிய வரி வசூல் முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உத்தரவின் தாக்கம் காரணமாக கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படும் முறை அடியோடு மாறும். இதனால் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஜூன் காலாண்டில் தங்கள் லாபத்தில் சரிவை அறிவிக்க வாய்ப்புள்ளது.
அதன்படி வாடிக்கையாளருக்கு லோன் வழங்கிய தேதியிலிருந்து வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிகழ்வுகளை கைவிட வேண்டும். முன்னதாக, கடன் வழங்குபவர்கள் கடன் ஒப்பந்தத்தை முடிக்க சுமார் 30-45 நாட்கள் எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்கள் வாடிக்கையாளருக்கு உண்மையான தொகை வழங்கப்படாமல் வட்டி விகிதத்தை சுதந்திரமாக வசூலித்தனர். அதாவது கடன் தொகை கொடுக்கும் முன்.. அது process செய்யப்பட்ட நாளில் இருந்தே கடனுக்கான வட்டி வசூல் செய்யப்பட்டு வந்தது.
அதன்படி லோன் எடுத்தும் கூட.. வாடிக்கையாளருக்கு உண்மையான தொகை வழங்கப்படாமல் வட்டி விகிதத்தை சுதந்திரமாக வசூலித்தனர். அது process செய்யப்பட்ட நாளில் இருந்தே கடனுக்கான வட்டி வசூல் செய்யப்பட்டு வந்தது. இனி அப்படி செய்ய கூடாது.
வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிகழ்வுகளை கைவிட வேண்டும். இனி லோன் கொடுத்த பின்புதான் வட்டி வசூலிக்க வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
வீட்டு கடன்: ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும்.
இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.
ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ரெப்போ ரேட் மாறவில்லை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை மாற்றியமைக்கவில்லை என்று அறிவித்துள்ளது. இந்த வருடமும் ரெப்போ ரேட் 6.5 சதவீதமாக தொடரும் என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் அக்டோபர் 6ஆம் தேதி அறிவித்தார்.
இதுதான் தற்போது வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தியாக மாறி உள்ளது. இதனால்; உங்கள் வட்டியோ, வட்டி செல்லும் காலமோ மாறாது. இதை பயன்படுத்தி மீண்டும் ரெப்போ ரேட் உயரும் முன் நீங்கள் கடனில் முன் தொகை செலுத்தி பாதி அடைக்கலாம். இப்போது கடனில் முன்தொகைஸ் செலுத்துவதே சரியாக இருக்கும் .
நீங்கள் முன் தொகை செலுத்தினால் அது மொத்தமாக அசலில் கழியும். உதாரணமாக கையில் ஒரு 3 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. உங்களிடம் 20 லட்சம் லோன் மிச்சம் உள்ளது என்றால் இந்த முன் தொகையை கொடுத்தால் மொத்தமாக அது கடனில் கழிந்து 17 லட்சமாக மாறும். மீதம் உள்ள தொகைக்கே வட்டி போடப்படும்.
ரெப்போ ரேட் குறையாத காரணமாக இந்த முறை இஎம்ஐ அதிகரிக்கப்படவில்லை. இப்போதே குறிப்பிட்ட தொகையை முன் தொகையாக செலுத்தினால்.. அடுத்த முறை ரெப்போ ரேட்டை அதிகரிக்கும் போது நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை.
கூடுதல் அதிகாரம்: பொதுவாக ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி வங்கிதான் முடிவு எடுக்கும். அதாவது உங்களிடம் கேள்வி கேட்காமல் அவர்கள் முடிவு எடுத்து உங்களிடம் தெரிவிப்பார்கள்.
லோன் அடுத்தவர்களுக்கு இதில் குரல் எதுவும் கிடையாது. அவர்கள் முடிவு எதையும் எடுக்க முடியாது. அதன்படி இனிமேல், உங்களது ஒப்புதல் இல்லாமல் இதில் மாற்றங்களை செய்ய முடியாது. வீட்டுக்கடன் காலத்தை அல்லது EMI ஐ வங்கிகள் மாற்ற முடியாது. இதில் வங்கிகள் - லோன் வாங்கியவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல் வீட்டுக்கடன் காலத்தை உயர்த்த வேண்டும் என்று உங்களை வங்கிகள் வறுபுறுத்த முடியாது. அதேபோல் EMI ஐ வங்கிகள் மாற்றுவதை பற்றியும் வங்கிகள் பிரஷர் கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லும் முடிவையே இனி வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதாவது ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்த்த விரும்பினால் உயர்திக்கொள்ளலாம். இஎம்ஐ காலத்தை உயர்த்த விரும்பினால் அதை உயர்திக்கொள்ளலாம்.
ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டு முறை ரெப்போ உயர்த்தப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6.50% ஆக உள்ளது.
No comments