Breaking News

யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயம்? தவறினால் என்னவாகும்?

 


ருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய தவறியவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டக்கூடியவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தனி நபராக இருந்தாலும், அல்லது தொழில் நிறுவனமாக இருந்தாலும் அது கட்டாயம் என்ற நிலையில், அதை எப்போது தாக்கல் செய்ய வேண்டும், காலக்கெடு தவறியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

2023-24ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31. அதாவது இம்மாத இறுதி.

காலக்கெடுவை தவறவிட்டால்...

ஜூலை 31க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய தவறிவிட்டால், 2023-24ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாமதமாக 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆண்டு இறுதி வரை கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், நீங்கள் தாமதப்படுத்தும் காலத்தை பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வதை எவ்வளவு தாமதப்படுத்துகிறீர்களோ, அத்தகைய வருமானங்கள் குறைந்த வரிக்கான சில விலக்குகளை இழக்க நேரிடும். மேலும், வருமான வரித்துறையின் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.

ஐடிஆர் யார் தாக்கல் செய்ய...

* சம்பளம் அடிப்படை வரி விலக்கு வரம்பை மீறினால், நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* வருமான வரி நோக்கங்களுக்காக நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்தால் மற்றும் இந்தியாவுக்கு வெளியே வருமானம் தரக்கூடிய ஏதேனும் சொத்துகள் இருந்தால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* இந்தியாவுக்கு வெளியே பராமரிக்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்து கணக்குகளுக்கு நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவராக இருந்தாலும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகள், பத்திரங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அல்லது பணியாளர் பங்கு விருப்பங்களில் (ESOPS) பணம் போட்டிருந்தால் வருமான அளவைப் பொறுத்து ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

*உங்கள் பெயரில் மின் இணைப்பு இல்லாவிட்டாலும், கடந்த ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேல் மின் கட்டணத்தைச் செலுத்தியிருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

* வெளிநாட்டுப் பயணத்திற்காக ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருந்தால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் உங்கள் பெயரில் உள்ள வங்கி டெபாசிட்டுகள் ரூ.50 லட்சத்திற்கு மேல் இருந்தால் அல்லது நடப்புக் கணக்குகளில் ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* நீங்கள் செய்யும் வணிகத்தில் அனைத்து விற்பனையின் மதிப்பு ரூ.60 லட்சத்திற்கு மேல் இருந்தாலும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம்.

பூர்த்தி செய்ய வேண்டிய ஐடிஆர் படிவங்கள் என்ன?

ஐடிஆர் 1 படிவம்: சம்பளம், வீட்டுச் சொத்து மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் வந்தால்

ஐடிஆர் 2 படிவம்: வணிக வருமானம் இல்லாத தனி நபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள்

ஐடிஆர் 3 படிவம்: வணிகம் அல்லது தொழிலில் வருமானம் உள்ள தனி நபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள்.

ஐடிஆர் 4 படிவம்: வணிகம் அல்லது தொழிலில் இருந்து வரும் அனுமான வருமானம் உள்ளவர்கள்.

ஐடிஆர் தாக்கலுக்கான ஆவணங்கள்

மாதச் சம்பளம் பெறுபவர்கள் நிறுவனம் அல்லது முதலாளியிடம் இருந்து பெற்ற படிவம் 16, பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி டெபாசிட் உள்ளிட்ட முதலீட்டுச் சான்று, PPF வைப்புத் தொகை, வீட்டுக் கடன் வட்டிச் சான்றிதழ் மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய ரசீதுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.

No comments