Breaking News

இரவோடு இரவாக.. நாடு முழுக்க உள்ள அரசு, தனியார் ஊழியர்களுக்கு போன வார்னிங்.. நோட் பண்ணுங்க

 

வருமான வரி தாக்கல் தொடர்பாக நாடு முழுக்க உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முக்கியமான் எச்சரிக்கை மெசேஜ் ஒன்று சென்றுள்ளது.

தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலங்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான தாக்களில் தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய நடத்தை மிக தவறானது. கடுமையான விளைவுகளை பணியாளர்கள் இதன் மூலம் சந்திக்க நேரிடும். இது பெரிய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுக்கும்.

வருமான வரித் துறை, தெற்கு மத்திய ரயில்வேயுடன் (SCR) இணைந்து சமீபத்தில் விஜயவாடாவில் 'அவுட்ரீச் விழிப்புணர்வு நிகழ்ச்சியை' நடத்தியது. இந்த நிகழ்வின் இலக்கானது, துல்லியமான வரித் தாக்கல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஊழியர்களுக்குக் கற்பிப்பதும், வரி இணக்கம் குறித்த அத்தியாவசிய அறிவை அவர்களுக்கு வழங்குவதும், அவர்கள் சார்பாக தவறான ரிட்டர்ன் கோரிக்கைகளை செய்யக்கூடிய இடைத்தரகர்களை நம்புவதைத் தடுப்பதும் ஆகும்.

I-T துறை சமீபத்தில் செய்த சோதனை சரிபார்ப்பு முறை மூலம் பல தவறான ரிட்டர்ன் தாக்கல் மற்றும் விலக்குகளை கண்டுபிடித்து உள்ளன. மக்கள் பலர் தவறான தகவல்களை ரிட்டர்ன்களில் பதிவு செய்துள்ளதாக கண்டுபிடித்து உள்ளனர். இப்படிப்பட்ட தவறான ரிட்டன்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, ஆக்சன்கள் எடுக்கப்படும் நிதித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி: ஏற்கனவே குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. ஆனால் சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் ரீ பண்ட் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு உள்ளன.

முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும்.வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

இதில் கிட்டத்தட்ட 31 லட்சம் பேர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.

வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.

இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களின் கிட்டத்தட்ட 31 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக கணக்கில் பணம் பெறாதவர்கள் உடனடியாக அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐடி ரிட்டர்ன்ஸ் அவர்களுக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி கண்டுபிடிக்க வேண்டும்?: வருமான வரிக்கான் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் சோதனையை செய்யுங்கள்.

அதன்படி https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறை பக்கத்திற்கு செல்லவும். அதில் இன்கம் டேக்ஸ் ரிட்டன் (ITR) ஸ்டேட்டஸ் பக்கத்தில் சென்று உங்கள் லாகின் விவரங்களை கொடுத்து லாகின் செய்யவும்.

இதில் 'இன்கம் டேக்ஸ் ரிட்டன் (ITR) ஸ்டேட்டஸ்' பகுதியை கிளிக் செய்தால் அதில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். அதன்பின் இ வெரிஃபிகேஷன் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். கடைசியாக processing மட்டும் கிரீன் ஆகாமல் இருக்கும்.

அப்படி இருந்தால் அதன் அர்த்தம் விரைவில் உங்கள் ரிட்டர்ன் சோதனை செய்யப்பட்டு பணம் கொடுக்கப்படும். ஒருவேளை அதுவும் கிரீன் கலரில் இருந்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் மெயிலை சோதனை செய்யவும். அதில், இன்கம் டேக்ஸ் நோட்டிஸ், விலக்கம் கேட்டு மெயில் எதுவும் வந்துள்ளதா என்று பார்க்கவும்

No comments