School Morning Prayer Activities - 10.07.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:414
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
பொருள்: நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்;
அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல் போல் துணையாகும்.
பழமொழி :
No rain, no grains.
மாரியல்லாது காரியமில்லை
இரண்டொழுக்க பண்புகள் :
*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.
*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.
பொன்மொழி :
ஆயிரம் வீண் வார்த்தைகளை விட பயனுள்ள இதமான ஒரு நல்ல வார்த்தை சிறந்தது
- புத்தர்.
பொது அறிவு :
1. நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன?
விடை: 16 எலும்புகள்
2. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?
விடை: பாரி
English words & meanings :
occupy-ஆக்கிரமிப்பு,
capture-கைபற்று
வேளாண்மையும் வாழ்வும் :
உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இயற்கை வேளாண்மை அவசியம்.
ஜூலை 10 இன்று
சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்
சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர். முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.
நீதிக்கதை
காலத்தின் அருமை
விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தார். அவர் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அரசர் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, “அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது” என்றார்.
இரண்டாவது அறிஞர், “மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது” என்று பதிலளித்தார்.
மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்” என்று பதில் அளித்தார்.
நான்காவது அறிஞர், “அரசே, நம் பூமிக்கு வேண்டியஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது” என்றார்.
ஐந்தாவது அறிஞர், “வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது” என்றார்.
இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து, “அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்தது. நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்?. அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது?. பொறுமையாக இருக்க ஏது அவகாசம்? சூரியனை பயன்படுத்த ஏது காலம்?. அன்பு காட்ட ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது காலம்தான்”.
ஆகவே, அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்க பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ? அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
அரசர்,ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார்.
நீதி : காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாதது காலத்தை தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எனவே இளமையிலே நன்கு கற்க வேண்டும்.
இன்றைய செய்திகள் - 10.07.2024
¶ தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
¶ வணிக வரித்துறையில் இந்த நிதியாண்டின் முதல் 3 மாதங்களில், கடந்த நிதியாண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
¶ அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு; ஏரி, குளங்களில் யாரும் குளிக்க வேண்டாம்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
¶ பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை: ரயில்வே காவல்துறை எச்சரிக்கை.
¶ கேரளாவின் சொந்த விமான நிறுவனம்: ‘ஏர் கேரளா’ சேவைக்கு மத்திய அரசு அனுமதி.
¶ மும்பைக்கு ரெட் அலர்ட்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
¶ விம்பிள்டன் டென்னிஸ்: குரோஷியாவின் டோனா வெக்கிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்.
¶ கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா.
Today's Headlines
¶ The Tamil Nadu government has ordered the transfer of 18 IPS officers in Tamil Nadu.
¶ In the first 3 months of this financial year, Minister B. Murthy said that in the first 3 months of this financial year, an additional revenue of Rs.3,727 crore has been earned over the last financial year.
¶ Amoebic encephalitis; No one should bathe in lakes, ponds: Public Health Department advises.
¶ 2-year jail term for college students who engage in violence in public places: Railway Police warns
¶ Kerala's Own Airline: Central Govt approves 'Air Kerala' service.
¶ Red alert for Mumbai: Rail, flight services affected; Holidays for schools and colleges.
¶ Wimbledon Tennis: Croatia's Donna Vekic advances to semi-finals.
¶ Copa America football: Colombia advanced to the semi-finals by beating Panama.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments