உங்களுக்கு மாதம் ரூ. 30,000 பென்ஷன் வேணுமா ? இந்த திட்டத்தில் சேருங்க போதும்..!
வேலைக்கு சென்று கொண்டிருக்கும் சமயத்திலே ஓய்வுக்க திட்டமிடல் செயும் போது தான், ஒய்வு காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும்.ஓய்வுதியம் என்பது கண்டிப்பாக மூத்த குடிமக்களுக்கு அவசியமான ஒன்று.
ஆடி ஓய்ந்து வீட்டில் அமரும் நேரத்தில் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும் மாதம் பென்சன் அவர்களை வாழ வைக்கும். யாரை நம்பியும் அவர்கள் சார்ந்து இல்லாமல் தனது சேமிப்பால் அவர்களின் பண தேவையை பார்த்துக்கொள்வார்கள்.
NPS இந்த திட்டம் குறித்து இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இனியாவது தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள். என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு முதலீடு திட்டம்.இதில் PPF அல்லது EPF ஐ விட சற்றே அதிக வருவாயை நீங்கள் பெறலாம். அதிலும் அதிகமான வட்டியையும் நீங்கள் இதில் பெற முடியும்.இந்த ஸ்கீம் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (PFRDA) வாயிலாக இயங்கி வருகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓய்வு கால திட்டமாக கருதப்படுகிறது NPS. இதில் முதலீடு செய்து பயன்பெறுவது குறித்து பார்க்கலாம்.
உங்களுடைய 21 வது வயதில் நேஷனல் பென்ஷன் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2,650 ரூபாய் பணத்தை நீங்கள் முதலீடு செய்து வருவதாக வைத்துக் கொள்வோம். இவ்வாறு அடுத்த 39 வருடங்களுக்கு நீங்கள் முதலீடு செய்யும் பொழுது, 60வது வயதில் நீங்கள் ஓய்வு பெறும் பொழுது அதற்கு பிறகான காலத்தில் ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாயை பென்ஷனாக பெறலாம்.
39 வருடங்கள் ஒவ்வொரு மாதமும் 2,650 ரூபாய் முதலீட்டில் 10% ரிட்டன் எதிர்பார்க்கலாம். இந்த கணக்கீட்டில் முதலீடு செய்து வரும் போது இறுதியாக 1,52,66,310 ரூபாய் என்ற தொகை மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு இருக்கும். இதிலிருந்து 60% தொகையை ஓய்வு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். மாத பென்ஷன் ரூ. 30,533 தொகையை எதிர்பார்க்கலாம்.
ஓய்வு கால வயதில் அதிகபட்சமாக 60% பணம் மட்டுமே வித்ட்ரா செய்வதற்கு அனுமதிக்கப்படும். மீதமுள்ள 40% பணம் மறுமுதலீடு செய்வதற்கு ஆனுவிட்டியாக இருக்கும். கடனீட்டு திட்டங்கள் அல்லது கார்ப்பரேட் பாண்டுகளில் அரசு இந்த பணத்தை முதலீடு செய்யும். இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் கிடைப்பது செய்யப்படும்.
இனியும் லேட் செய்யாதீர்கள் உடனே இந்த திட்டம் குறித்து தெளிவாக விசாரித்து சேமிக்க தொடங்குகள். உங்கள் முதுமை வாழ்வை இனிமையாக்குங்கள்.
No comments