Breaking News

1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

 

க்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் உயர்த்தியுள்ளன.

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கா அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD-ன் வட்டி விகிதங்கள்

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 6.9% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.15% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் பரோடா 7.15% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் இந்தியா 6% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

கனரா வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு கனரா வங்கி 6.25% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 6.25% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.45% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

இந்தியன் வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்தியன் வங்கி 7.5% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 5.75% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 7.05% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 7.15% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.5% வரை வட்டியை உயர்த்தியுள்ள நிலையில், 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வரை வட்டியை உயர்த்தியுள்ளது.

No comments