வெறும் 1 ரூபாயுடன் இந்த நாடுகளுக்கு சென்றால் பணக்காரர்கள் ஆகலாம்.. எப்படி தெரியுமா?
ஒரு நாணயத்தின் வலிமை என்பது மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், அதன் மாற்று விகிதத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, அதன் நாணயத்தின் மதிப்பைப் பொறுத்தது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு (USD) எதிராக நமது ரூபாய் பலவீனமாக உள்ளது என்று அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பல நாடுகளின் நாணயங்களை விட நமது ரூபாய் மிகவும் வலிமையானது என்று.
ஒரு இந்திய ரூபாயை எடுத்துக் கொண்டு வேறு நாட்டிற்கு சென்றால், நீங்கள் கோடீஸ்வரரைப் போல உணரலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இது உண்மை தான். இந்திய ரூபாய் மற்றும் அதன் நாணய மதிப்புகளுக்கு எதிராக மிகவும் பலவீனமாக இருக்கும் சில நாடுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதன்படி, நமது இந்திய ரூபாய்க்கு எதிராக லெபனான் பவுண்டு (LBP) மிகவும் பலவீனமான நாணயமாக உள்ளது. ஏனென்றால், ஒரு இந்திய ரூபாய் வெறும் 1,100 LBP மதிப்பு மட்டுமே. இதன்மூலம், லெபனானில் பொருளாதாரம் எவ்வளவு நிலையற்றதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அந்த வகையில், இந்த நாட்டிற்கு ஒருவர் 1 லட்சம் ரூபாய் எடுத்து சென்றால், அது 11 கோடி லெபனான் பவுண்டுகள் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
அடுத்ததாக, ஈரானிய ரியால் (IRR) உள்ளது. கடுமையான பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில், ஒரு ரூபாய் 497 IRR மதிப்புடையது. அதாவது நீங்கள் அங்கு ஒரு ரூபாய் எடுத்து சென்றால், அது சுமார் 500 ரூபாய்க்கு சமம். மேலும், வியட்நாமில், ஒரு ரூபாய் 300 VND மதிப்புடையது ஆகும். லாவோஸில், ஒரு ரூபாய் 250 LAK மதிப்புடையது.
சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இந்தோனேசியாவில், நாணய மதிப்பு பலவீனமாக உள்ளது. இந்தோனேசிய ரூபியா (IDR) இந்திய ரூபாயை விட பலவீனமானது. ஒரு ரூபாய் 188 IDRக்கு சமம் ஆகும். நீங்கள் பட்ஜெட்டில் பிளான் செய்து பாலி போன்ற சுற்றுலா தளத்திற்கு சென்று வரலாம். அதிகம் செலவாகாது.
நாணயம் வலிமையாக இருந்தால், அந்த நாட்டின் பொருளாதாரமும் நிலையானதாக இருக்கும். இதனால், இந்த அனைத்து நாடுகளையும் விட நமது இந்திய ரூபாயின் மதிப்பு வலிமையானதாக இருப்பது நமது பொருளாதார ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது.
No comments