Breaking News

தீபாவளி விடுமுறை எத்தனை நாட்கள்… அக்டோபர் 17ஆம் தேதியா, 21ஆம் தேதியா- தமிழக அரசு முடிவு என்ன?

 


விரைவில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் கூடுதல் விடுமுறை கிடைக்குமா, அதுவும் இரண்டு நாட்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பலரும் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு முடிவை எதிர்பார்த்துள்ளனர்.

Tamil Nadu Government Diwali Bonus: தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களின் உழைப்பின் பலனாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, அந்நிய முதலீடுகளையும் ஈர்த்துவருகிறது. 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 9.69 சதவீதம் என்பது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்ததாகும் என்பதோடு, கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மிக உயர்ந்த வளர்ச்சியுமாகும்.

நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டை பொறுத்தவரையில் தீபாவளி திங்கள் அன்று வருகிறது. எனவே அக்டோபர் 18 சனி, அக்டோபர் 19 ஞாயிறு, அக்டோபர் 20 திங்கள் எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இருப்பினும் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்புபவர்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

தீபாவளி பண்டிகை - வெளியூர் பயணத் திட்டங்கள்

விடுமுறையின் தொடங்குவதற்கு முன்னதாக அக்டோபர் 17 வெள்ளி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மூலம் புறப்படுவர். இதேபோல் விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதற்கு அக்டோபர் 20 திங்கள் இரவு திட்டமிடுவர். இதனால் பேருந்துகள், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் டிக்கெட் முன்பதிவு வேகமாக விற்று தீர்ந்து வண்ணம் இருக்கிறது.

டிக்கெட் கிடைப்பதில் சிரமம்

எனவே கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி முன்கூட்டியே பலர் திட்டமிட்டாலும் விடுப்பு கிடைப்பது சிரமமாக இருக்கும். எனவே தான் தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. எப்படி பார்த்தாலும் ஒரு நாள் மட்டுமே அதிகபட்சமாக விடுமுறை விடப்படும். இதை ஈடுசெய்யும் விதமாக வேறொரு நாளை வேலை நாளாக தமிழக அரசு அறிவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை கோரிக்கை

அந்த ஒரு நாள் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவா, இல்லை பின்பாகவா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது. எதற்காக ஒரு நாள்? இரண்டு நாட்களாக சேர்த்து விடுமுறை தர வேண்டும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி விசாரிக்கையில், அக்டோபர் 21ஆம் தேதி அன்று விடுமுறை விட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 21 சிறப்பு விடுமுறை - தமிழக அரசு முடிவு என்ன?

எனவே தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி விட்டு திரும்புவதில் ஏற்படும் சிரமம் சற்று குறையும் எனத் தெரிகிறது. அதாவது, தீபாவளிக்காக புறப்படும் போது வெள்ளி இரவு, சனி இரவு, ஞாயிறு இரவு என கொஞ்சம் கொஞ்சமாக புறப்பட்டு செல்வர். மறுமார்க்கத்தில் அக்டோபர் 20 திங்கள், அக்டோபர் 21 செவ்வாய் இரவு எனத் திரும்புவதற்கு டிக்கெட்கள் முன்பதிவு செய்து தயாராக உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

தமிழக அரசின் தீபாவளி போனஸ் அறிவிப்பு

முன்னதாக அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைத்து துறைகளில் பணியாற்றும் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் அளிக்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் கருணைத் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

No comments