அக்டோபர் 3-ஆம் தேதி துலாம் ராசியில் குடியேறும் புதன்; யாருக்கு என்ன பலன் அளிக்கும்?
அறிவாற்றல், படைப்பாற்றலுக்கு பெயர் பெற்ற கிரகமான புதன் கிரகம் ஆனது, இன்னும் 2 நாட்களில் தனது ராசியை மாற்றுகிறார். அதாவது, கடந்த செப்டம்பர் 15 தொடங்கி கன்னி ராசியில் பயணித்து வந்த புதன், வரும் அக்டோபர் 3-ஆம் நாள் துலாம் ராசியில் குடியேறி மற்ற கிரகங்களுடன் சிறப்பு தொடர்பை உண்டாக்குகிறார். புதன் கிரகத்தின் இந்த பெயர்ச்சி ஆனது, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் தனித்துவமான பலன்களை அளிக்க இருப்பதாக கணிக்கப்படுகிறது!
நடப்பு 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 15 முறை தனது ராசியை மாற்றும் புதன், வரும் அக்டோபர் 3-ஆம் நாள் 11-வது முறையாக தனது ராசியை மாற்றுகிறார். ஜோதிட நிபுணர்கள் கருத்துப்படி துலாம் ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது மிகவும் புனிதமான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. புதன் கிரகத்தின் விருப்பமான ராசிகளில் ஒன்றாக கருதப்படும் துலாம் ராசியில், புதன் சஞ்சாரம் செய்வது துலாம் உள்ளிட்ட சில ராசியினரின் தொழில் வாழ்க்கை, கல்வி மற்றும் காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த நற்பலன்களை கொண்டு வர இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், எந்த ராசிக்கு என்ன பலன் அளிக்கிறது? என சற்று விரிவாக இங்கு காணலாம்!
மேஷ ராசியினரின் ஜாதகத்தில் 7-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த புதன், அவர்களின் திருமண வாழ்க்கை மற்றும் கூட்டு முயற்சியில் செய்யப்படும் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. திருமணம் முடிக்காதவர்களுக்கு திருமண காரியங்கள் கைகூடும், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஏற்கனவே செய்து வரும் தொழிலில் போதுமான வருமானமும் கிடைக்கும்.
ரிஷப ராசியினருக்கு ஆறாவது வீட்டில் தாக்கத்தை உண்டாக்கும் இந்த புதன் பெயர்ச்சி, அவர்களின் தொழில் போட்டிகளை அதிகரிப்பதோடு ஆரோக்கியம் சார்ந்த சில சிக்கல்களையும் கொண்டு வருகிறது. அந்த வகையில் ரிஷப ராசியினரை கவலையில் மூழ்கடிக்கும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும், சக ஊழியர்களிடம் வழக்குகள் உண்டாகும்!
மிதுன ராசியினர் வாழ்க்கையில் போட்டிகள் அதிகரிக்கும் ஒரு காலமாக இது அமையும். பணியிடத்தில் போட்டிகள் அதிகரிக்கும் அதே நேரம், பள்ளி - கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் போட்டிகளும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக மாறும், கலைத்திறன் கொண்டவர்கள் தங்கள் துறையில் சிறந்து விளங்கும் ஒரு காலமாகவும் இது அமையும். தங்கள் தனித் திறமைகளை உலகறியச் செய்யும் ஒரு காலமாகவும் இது அமையும்.
கடக ராசியினரின் ஜாதகத்தில் 4-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் ஒரு கிரக நிலை மாற்றமாக இந்த புதன் பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கொண்டு வரும் இந்த பெயர்ச்சி ஆனது, தாய் வழி சொந்தங்கள் வழியே எதிர்பாராத உதவிகளை பெற்று தரும். இந்த உதவிகள் மூலம் உங்கள் வருமானத்தை பெருக்குவீர்கள், உங்கள் விருப்பமான வாகனம், பொருட்களை வாங்குவீர்கள்.
சிம்ம ராசியினரின் ஜாதகத்தில் 3-வது வீட்டில் இந்த புதன் பெயர்ச்சி மாற்றத்தை கொண்டு வருகிறது. தைரியம், வீரம், சகோதரத்துவத்தை குறிக்கும் ஒரு வீடாக இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிம்ம ராசியினரின் மனோ தைரியத்தை அதிகரித்து, தொழில் வாழ்க்கையில் வெற்றிகளை கொண்டு வரும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவசரப்பட்டு பெரிய வாக்குறுதிகளை அளிப்பது கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கன்னி ராசியினரின் ஜாதகத்தில் 2-வது வீட்டில் தாக்கத்தை உண்டாக்கும் இந்த புதன் பெயர்ச்சி ஆனது, அவர்களின் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது. தங்களின் கனிவான பேச்சுக்கள் மூலம், காரியங்களை சாதிக்கும் ஒரு காலமாகவும், தொழில் வளர்ச்சி காணும் ஒரு காலமாகவும் இது பார்க்கப்படுகிறது. பேச்சாற்றல் மூலம் வெற்றிகள் பல கிடைக்கும் நிலையிலும், உங்கள் வார்த்தைகளின் மதிப்பை அறிந்து அளவாக பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
துலாம் ராசியின் லக்ன வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த புதன் பெயர்ச்சி ஆனது அவர்களின் ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறது. சவால்கள் நிறைந்த பணிகளை தேர்வு செய்து அதில் வெற்றி காண உதவி செய்கிறது. பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும், மண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும், வாழ்க்கை சிறப்பாக மாறும்.
விருச்சிக ராசியினரின் ஜாதகத்தில் 12-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த புதன் பெயர்ச்சி ஆனது, வெளிநாடு பயணங்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், குடும்ப செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் என உங்கள் சேமிப்பு முழுவதையும் குறைக்கிறது. நிதி நிலையில் காணப்படும் தாக்கம் உங்கள் மன அமைதியை பாதிக்கும், அழுத்தத்தை அதிகரிக்கும். குழப்பமான ஒரு மனநிலையை உண்டாக்கும்!
தனுசு ராசியினரின் ஜாதகத்தில் 11-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த புதன் பெயர்ச்சி ஆனது, வருமானத்தை அதிகரிக்கும் வழிகளை கொண்டு வருகிறது. பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும், புதிய பணிகளை எடுத்து செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவுக்கு வரும், தொழில் போட்டிகள் குறையும், செய்யும் முதலீடுகள் அனைத்தும் வெற்றியை கொண்டு வரும், உங்கள் வருமானத்தை அதிகரிக்கும்.
எதிர்வரும் புதன் பெயர்ச்சி ஆனது மகர ராசியினரின் ஜாதகத்தில் 10-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாற்றம் ஆனது தொழில் வாழ்க்கை மற்றும் பணியிடத்தில் சாதகமான ஒரு சூழ்நிலையை உண்டாகிறது. கடினமாக உழைப்பீர்கள், உழைப்புக்கான பலன்களையும் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் சக்திக்கு மீறி அதிகமாக உழைக்க வேண்டாம், கடின உழைப்பு உங்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
கும்ப ராசியினரின் ஜாதகத்தில் 9-வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த கிரக நிலை மாற்றம் ஆனது, அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. அதிர்ஷ்டத்தால் பல வெற்றிகளையும் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. குறித்த இந்த காலத்தில் கும்ப ராசியினரின் மத ஈடுபாடுகள் அதிகரிக்கும், வழிபாடுகள் அதிகம் செய்வீர்கள், பணங்களும் பல மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும், வெற்றிகளை குவிப்பீர்கள்!
மீன ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத பண வரவை கொண்டு வரும் ஒரு கிரக நிலை மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றம் காணப்படும் அதேநேரம், குடும்ப உறவுகளின் மண வாழ்க்கை தொடர்பான காரியங்களும் வெற்றியில் முடியும். அதாவது, உடன் பிறந்தவர்களின் திருமண காரியங்கள் கைகூடும், நல்ல வரன் கிடைக்க, விரைவில் திருமணத்தை முடிக்கும் யோகமும் காணப்படுகிறது!
No comments