Breaking News

நீர்வழி ஆணைய வேலை வாய்ப்பு; 14 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன?


 


இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் கிளர்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 14 பணியிடங்கள்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேர்வு முறை என்ன? முழு விபரம் இங்கே

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2025

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 2

Junior Hydrographic Surveyor

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: Degree in Civil Engg. OR Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 6

Senior Accounts Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Institute of Charted Accountants of India தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: நிலை - 10

வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iwai.nic.in/recruitment/vacancy என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

ADVERTISEMENT PDF CLICK HERE 

 

 

No comments