Breaking News

வீட்டுக் கடன் வட்டியில் பல லட்சங்களை சேமிப்பது எப்படி? ஆர்பிஐ வெளியிட்ட டக்கரான அறிவிப்பு!!

 


இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்கள் சொந்தமாக வீடு வாங்குவது , வாகனம் வாங்குவது என பலவற்றுக்கும் வங்கிகளில் தான் கடன் வாங்குகின்றனர். வீட்டு கடன், வாகன கடன் , தனிநபர் கடன் என பல வகையான கடன்கள் நமக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன.

வங்கிகள் கடன் வழங்கும்போது நம்முடைய கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் நமக்கான கடன் தொகையும் அந்த கடனுக்கான வட்டியையும் மாதந்தோறும் நாம் செலுத்த வேண்டிய ஈஎம்ஐ தொகையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் உங்களுக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு , அப்படியே கடன் கிடைத்தாலும் அதிக வட்டி விகிதத்தை நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும்.

கடன் வாங்கும் போது உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கிறது , கடன் வாங்கிய சில காலங்களில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகரித்து இருக்கிறது என்றாலும் வங்கிகள் உங்களுக்கான வட்டியை குறைப்பது கிடையாது . ஆனால் வங்கிகள் இனி அவ்வாறு தவிர்க்க முடியாது, கடன் வாங்கிய பிறகு உங்களின் கிரெடிட் ஸ்கோர் அதிகரித்தால் கடன் வட்டியை குறைத்தாக வேண்டும். அந்த வகையிலான ஒரு சிறப்பான தரமான சம்பவத்தை ஆர்பிஐ செய்து இருக்கிறது.

வீட்டுக் கடன் வாங்கும் போது புளோட்டிங் ரேட் எனப்படும் மிதக்கும் வட்டி விகிதத்தில் நீங்கள் கடன் வாங்கி இருந்தால் நிச்சயம் உங்களின் வட்டியை இந்த புதிய விதியின் மூலம் நீங்கள் குறைக்கலாம். மிதக்கும் வட்டி விகிதத்தில் நாம் கடன் இரண்டு நம் கடனுக்கான வட்டி இரண்டு பிரிவுகளை கொண்டு கணக்கிடப்படும். ஒன்று ரெப்போ வட்டி விகிதம் இத்துடன் ஸ்பிரெட் எனப்படும் ஒரு வட்டிக்கான பிரிவும் சேர்க்கப்படும். அதாவது ரெப்போ வட்டி விகிதத்துடன் நம்முடைய கிரெடிட் ஸ்கோர், வங்கி மார்ஜின், கடன் திரும்ப செலுத்தும் காலம் ஆகியவற்றை கொண்டு வட்டியை நிர்ணயம் செய்வார்கள்.

அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இவ்வாறு உங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படும் போது ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் இருக்கக்கூடிய நீங்கள் ஃபிக்சட் வட்டி விகிதத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம் அதற்கான ஒரு நெகிழ்வு தன்மையையும் ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது .

உதாரணமாக அருண் என்ற நபர் 2 ஆண்டுகளுக்கு முன் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி இருக்கிறார். அப்போது அவரின் கிரெடிட் ஸ்கோர் 650. அதுவே தற்போது 780 என அதிகரித்துள்ளது. இவர் மிதக்கும் வட்டியில் வீட்டு கடன் வாங்கி இருந்தார் என்றால் உடனே வங்கிக்கு சென்று என்னுடைய கிரெடிட் ஸ்கோர் மேம்பட்டுள்ளது ஸ்பிரெட் வட்டி பிரிவில் வட்டியை குறையுங்கள் என கேட்கலாம். வங்கியும் உடனே அதனை ஆய்வு செய்து வட்டி குறைக்க வேண்டும். இதற்கு முன்பு வரை அருண் சென்று கேட்டிருந்தாலும் 3 ஆண்டுகள் முடியாமல் மாற்ற முடியாது என வங்கிகள் கூறி இருக்கும். ஆனால் இப்போது அப்படி கூற முடியாது.

அருணின் கோரிக்கையை ஏற்று வங்கி ஸ்பிரெட் பிரிவில் வட்டியை 0.35%ஆக குறைக்கிறது என வைத்து கொண்டால் கூட மொத்தமாக அவர் வங்கிக்கு செலுத்த கூடிய வட்டி தொகையில் பல லட்சம் ரூபாயை சேமிக்கலாம். ஆனால் இது மிதக்கும் வட்டி பிரிவில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாருங்கள், வங்கியை அணுகியை லட்சக்கணக்கிலான வட்டியை சேமியுங்கள். 

 

 

No comments