TNPSC Group 2, 2A Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு சற்று கடினம்; கட் ஆஃப் எப்படி இருக்கும்?
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் குரூப் 2, 2ஏ தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
குரூப் 2, 2ஏ தேர்வு கட் ஆஃப் தொடர்பாக சஞ்சு கரண்ட் அஃபையர்ஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தேர்வின் கடினத்தன்மை அதிகமாக இருந்தாலும் கட் ஆஃப் அதிகமாகவே இருக்கும்.
ஆங்கில தாள் கடினமாக இருந்தது. தமிழ் சற்று கடினமாக இருந்தாலும் ஆங்கிலத்தை விட சற்று எளிதாக இருந்தது. கணித வினாக்கள் அதிக நேரம் தேவைப்படுபவையாக இருந்தது. பொது அறிவு பகுதியில் பாதி வினாக்கள் எளிதாகவும், பாதி வினாக்கள் கடினமாகவும் இருந்தது.குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 163 – 165
பி.சி – 161 – 163
எம்.பி.சி – 159 – 161
பி.சி.எம் – 155 – 157
எஸ்.சி – 153 – 155
எஸ்.சி.ஏ – 150 - 152
எஸ்.டி – 148 - 150
இதிலிருந்து பெண்களுக்கு 3 கட் ஆஃப் மதிப்பெண்களும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 4 கட் ஆஃப் மதிப்பெண்களும் குறைய வாய்ப்புள்ளது.
குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 159 – 161
பி.சி – 155 – 157
எம்.பி.சி – 154 – 156
பி.சி.எம் – 148 – 150
எஸ்.சி – 146 – 148
எஸ்.சி.ஏ – 145 - 147
எஸ்.டி – 144 - 146
இதிலிருந்து பெண்களுக்கு 3 கட் ஆஃப் மதிப்பெண்களும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 5 கட் ஆஃப் மதிப்பெண்களும் குறைய வாய்ப்புள்ளது. இங்கு கட் ஆஃப் எனக் குறிப்பிடுவது கேள்விகளின் எண்ணிக்கை தான், மதிப்பெண்கள் அல்ல. இது தற்காலிக கட் ஆஃப் கணிப்பே, இதனை விட கட் ஆஃப் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம்.
No comments