8வது ஊதியக்குழு: பே மேட்ரிக்ஸில் மாற்றமா? 2 மடங்கு அதிகரிக்கும் மாத சம்பளம்.... முக்கிய அப்டேட்
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழுவில், சம்பளக் கணக்கீட்டின் ஒட்டுமொத்த அமைப்பிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. 7வது ஊதியக் குழுவில் அறிமுகப்படுத்தப்பட்ட பே மேட்ரிக்ஸ் முறை 8வது ஊதியக்குழுவிலும் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மட்டும் மாற்றப்படலாம்.
8வது ஊதியக்குழுவில் மத்திய அரசாங்கம் முற்றிலும் புதிய முறையை ஏற்றுக் கொள்ளுமா அல்லது 7வது ஊதியக்குழுவில் பயன்படுத்தப்படும் சம்பள மேட்ரிக்ஸ் கட்டமைப்பைத் தொடருமா? இந்த கேள்வி ஊழியர்களுக்கு உள்ளது.
8வது ஊதியக்குழுவில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு விஷயம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? புதிய ஊதியக்க்குழுக்கள் அமைக்கப்படும்போது, பழைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்படு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது.
8வது ஊதியக்குழுவில், சம்பளக் கணக்கீட்டின் ஒட்டுமொத்த அமைப்பு பெரிய மாற்றங்களுக்கு உள்ளாக வாய்ப்பில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவில் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பள மேட்ரிக்ஸ் முறை 8வது ஊதியக்குழுவிலும் நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மட்டும் மாற்றப்படலாம்.
8வது உதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கும் என கூறப்படுகின்றது. எனினும், 8வது உதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.46 ஆக நிர்ணயிக்கப்படலாம் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
7வது உதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.46 ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
புதிய சம்பள கமிஷனை அமல்படுத்துவதால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். நிலை 1 மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இலிருந்து லிருந்து ரூ.44,000 ஆக அதிகரிக்கலாம்.
ஒவ்வொரு சம்பளக் குழுவிலும் அகவிலைப்படி பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குகிறது. ஏனெனில் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு புதிய அடிப்படை சம்பளம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை சிறிது சிறிதாக அதிகரிக்கப்படுகின்றது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3,00 -க்குள் இருக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நிலையில், வெவ்வேறு ஃபிட்மென்ட் ஃபாக்டரில் குறைந்தபட்ச சம்பளமான ரூ.18,000 வாங்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560 / 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440 / 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040, / 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260 / 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480 / 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.54,000
No comments