Breaking News

TET தேர்வு ஏன் கடினமாக உள்ளது... தேர்ச்சி பெற என்ன வழி... உடைத்து பேசும் பேராசிரியர்

 

தமிழ்நாட்டில் ஆசிரியராக பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் “ஆசிரியர் தகுதி தேர்வு” (TET – Teacher Eligibility Test) என்பது கட்டாயமாகி விட்டது. இந்தத் தேர்வு, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் கல்வி உளவியலையும் ஒரே அளவில் மதிப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டில் முதல் முறையாக டெட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது .
ஆசிரியராக பணியாற்ற , மாநில அளவில் ஒரே அளவிலான தகுதி தேர்வை உருவாக்க வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கையின்  பரிந்துரையின் அடிப்படையில்தான் இது வந்தது. இதன் நோக்கம் — பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கல்வித் திறனிலும் உளவியல் புரிதலிலும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும் என்பதே.டெட் தேர்வில் தொடங்கிய நாள் முதல் இப்போது வரை தேர்வெழுதவர்களுக்கும் தேர்ச்சி அடைவோருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்துள்ளது. இந்த சிக்கல் ஏன் நிலவுகிறது இது எப்படி சரி செய்வது என்பதை பற்றி எல்லாம் விளக்கும் திருநெல்வேலி சதக் அப்துல்லா கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்
2012ம் ஆண்டு டெட் தேர்வில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 3,65,400 பேர் எழுத, 1,735 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 0.56% என்ற அதிர்ச்சியூட்டும் அளவில் இருந்தது. அடுத்த ஆண்டு 2013ல் 4,00,301 பேர் தேர்வு எழுத, 42,000 பேர் தேர்ச்சி பெற்று சதவீதம் 10.52% ஆக உயர்ந்தது. தொடர்ந்து இந்த வித்தியாசங்கள் இருந்து வந்தது .
2017ல் தேர்வில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை 5,1260 ஆக இருந்தது. அதில் 18,578 பேர் தேர்ச்சி பெற்றனர். சதவீதம் 3.63% மட்டுமே. இது மீண்டும் சீரழிவை காட்டியது. 2019ல் 3,79,730 பேர் தேர்வு எழுத, 316 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் — வெறும் 0.08%! இது டெட் தேர்வின் வரலாற்றில் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதமாகக் கருதப்படுகிறது.
2022ல் . 2,54,000 பேர் எழுதி, 15,430 பேர் தேர்ச்சி பெற்றனர் — சுமார் 6.07% சதவீதம். இதன்வழி ஒரு விஷயம் தெளிவாகிறது: டெட் தேர்வு என்பது கடினம் என்பதற்குக் காரணம் கேள்விகள் அல்ல,மதிப்பீட்டு முறையும் தரணிலையும் மாறுபடுவதால் தான் இனம் வித்தியாசங்கள் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் கேள்வித் தாள்களின் தன்மை, கேள்விகளின் ஆழம், மற்றும் மதிப்பீட்டு முறைமைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சதவீதங்களைப் பார்க்கும்போது, டெட் தேர்வு ஒரு திறமைக்கான சவாலான சோதனை என்பதை நாம் உணர முடிகிறது. இதேபோல், கல்லூரி அளவில் பேராசிரியர்களுக்கான NET (National Eligibility Test) தேர்விலும் இதே நிலைமை காணப்படுகிறது. NET தேர்வில் ஒரு லட்சம் பேர் எழுதினால், சுமார் ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவார்கள்.
டெட் தேர்வு என்பது வெறும் கேள்வி–பதில் போட்டி அல்ல, அது ஒரு ஆசிரியராக மாறும் பயணத்தின் மன உறுதியையும் கல்வி அடித்தளத்தையும் சோதிக்கும் ஒரு நுண்ணிய கட்டமைப்பு. தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பது, தேர்வு கடினம் என்பதற்கான அடையாளம் அல்ல; மாறாக, தரநிலை உயர்விற்கான உறுதியான அடையாளம். கல்வி தரம் மாறியுள்ள இன்றைய காலத்தில், தேர்வும் அதனுடன் இணைந்து கடினமடைந்துள்ளது. கல்லூரிகளில் இன்றைய NET, SET போன்ற தேர்வுகளும் இதேபோன்ற பாதையில்தான் செல்கின்றன. ஆசிரியராக இருப்பது இப்போது ஒரு பணியாக மட்டுமல்ல, ஒரு நெறிமுறைப்பணியாக மாறியிருக்கிறது. அதனால் தேர்வும், சவாலும் கடுமையாகவே இருக்கிறது. 

No comments