Breaking News

கனரா வங்கியில் வேலை!! 3500 காலியிடங்கள் - பட்டதாரிகளே உடனே அப்ளை பண்ணுங்க...

 



Canara Bank Job| அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு (SC/ST, OBC போன்றோருக்கு) வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) பயிற்சி வழங்கப்படும்.

 கனரா வங்கி, 'அப்ரண்டிஸ் சட்டம், 1961' (Apprentices Act, 1961) இன் கீழ் 2025-26 நிதியாண்டுக்கான பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த முன்னணிப் பொதுத்துறை வங்கி, நாடு முழுவதும் உள்ள 9800க்கும் மேற்பட்ட கிளைகளில் பயிற்சி பெறத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

மொத்தப் பணியிடங்கள் மற்றும் தகுதி;இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் 3500 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (Graduation) முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு: 01.09.2025 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு (SC/ST, OBC போன்றோருக்கு) வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) பயிற்சி வழங்கப்படும்.உதவித்தொகை (Stipend): பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ₹15,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை NATS போர்ட்டலில் பதிவு செய்தல்: அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் www.nats.education.gov.in என்ற அப்ரண்டிஸ் போர்ட்டலில் 22.09.2025 முதல் 12.10.2025 பதிவு செய்து, தங்களுடைய விவரங்களை 100% பூர்த்தி செய்திருக்க வேண்டும். போர்ட்டலில் விவரங்களைப் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே வங்கிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள், மாநில வாரியாகத் தயாரிக்கப்படும் தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதைத் தொடர்ந்து ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வும் நடைபெறும்.

இந்த அப்ரண்டிஸ் பயிற்சி ஒரு நிரந்தர வேலை அல்ல. இது ஒரு வருட கால பயிற்சி வாய்ப்பு மட்டுமே என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் சரியான தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். 


No comments