Breaking News

சத்துணவு பிரிவில் வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - நல்ல வாய்ப்பு

 


TN Govt Job 2025: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடுபவர்களுக்கான முக்கியமான செய்தி இது. எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் பணியிடம்(Computer Operator) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட்ட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இப்பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சத்துணவுப் பிரிவில் காலியாக உள்ள கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை கல்விச்
சான்றுகளுடன் 6.10.25 முதல் 13.10.25 முடிய நேரிலோ, தபாலிலோ சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் கீழ்க்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்:

1. அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
2. கணினியில் Ms.office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
3. கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. 01.07.2025 அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கணினி இயக்குபவர் பணி நியமன விதிகள்:

1. கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் ரூ.14000/- மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
2. இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
3. இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
4. பணி நியமனம் செய்யப்படும் பணியாளர் ரூ.200/-க்கான முத்திரைத்தாளில் ஒப்பந்தப்பணி பத்திரம் அளித்தல் வேண்டும்.
5. பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு, பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும். ஒவ்வொரு 11 மாத காலம் முடிவிற்குப்பின் இடைவெளிவிட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.
6. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. எவ்வித முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ கூடாது.
7. இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
8. தமிழ்நாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

 

No comments