Breaking News

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு 2025.. ரிசல்ட் எப்போது வெளியாகும்? பார்ப்பது எப்படி.. கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்

TNPSC Group 4 job 4  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வு முடிவுகள் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் மூன்று மாதங்களில் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியிருந்தது. இதன் அடிப்படையில் இந்த மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்? தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழகத்தில் அரசு வேலை கனவுடன் இருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கமாக உள்ளது. நன்கு படித்து தேவையான கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்தால் போதும், வேலை நிச்சயம் என்பதால் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வை எழுதுகிறார்கள்.
குரூப் 4 தேர்வு

அதிலும் குரூப் 4 தேர்வு, தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். குரூப் 4 தேர்வை பொறுத்தவரை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். உடனடியாக அரசு வேலை கிடைத்துவிடும் என்பதால் தேர்வர்கள் மத்தியில் குரூப் 4 தேர்வுகளுக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 3,935 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி இருந்தது.

எப்போது ரிசல்ட் வெளியிடப்படும்? சுமார் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய நிலையில், குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டது. கூடுதலாக 727 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியிருந்தது.

ரிசல்ட் எப்படி பார்ப்பது? தேர்வர்கள் குரூப் 4 ரிசல்ட்களை https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுவதை பார்க்க முடிந்தது. எனவே கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதா? என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே நிலவுகிறது.

கட் ஆஃப் மார்க் எவ்வளவு இருக்கும் இது தொடர்பாக கல்வியாளர்கள் கூறுகையில், குறைந்தபட்சம் 150 கேள்விகளுக்கு மேல் சரியான விடை அளித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முடிவுகள் வெளியான பின்னரே, இந்த ஆண்டுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களின் விவரங்களை உறுதியாக அறிய முடியும். தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால், குரூப் 4 தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த தேர்வு முடிவினை எதிர்பார்த்து உள்ளனர்.




 

 

No comments