Breaking News

மாணவர்கள் கவனத்திற்கு.. சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் -கல்வி அலுவலர் அறிவிப்பு:

 


திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 20225) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 

Breaking News About School Holiday: திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 1 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் இயங்கும் என அம்மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதுக்குறித்து விவரங்களை பார்ப்போம். 

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி கனமழை காரணமாக திருவள்ளூர் மற்ற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 2025) பள்ளிகள் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

முன்னதாக மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் அக்டோபர் 28 ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை காரணமாக மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்ற நோக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மோன்தா புயல் எச்சரிச்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. மோன்தா புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் காரணமாக சில மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

 

No comments