ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இப்பதிவு மிகவும் முக்கியமானதாகும்.
அனைவருக்கும் வணக்கம் 😊🙏
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அக்டோபர் மாத ஊதிய கேட்பு பட்டியல் அனுப்பும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.....
அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு உள்ள ஆசிரியர்களுக்கு புதிய அடிப்படை ஊதியம் மாற்றம் செய்து விடுங்கள்!!
ஊதிய மாற்றம் மற்றும் இந்த மாதமே புதிய DA 58% சேர்த்துக்கொள்ள அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளபடியால் 10 ஆம் தேதிக்கு பின்னர் ஊதிய கேட்பு பட்டியலை அலுவலகத்தில் கொடுக்கலாம்!!
புதிய DA 58% மற்றும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாத நிலுவை அனைத்தும் ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்பதால் மூன்று மாத நிலுவை தொகையும் அதே பில்லில் தனி காலத்தில் சேர்த்து கொடுக்க வேண்டும்!!
அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் DA 58%, DA நிலுவை ஆகியவை கூடும் போது வருமானவரி தானாகவே கூடுதல் ஆக பிடித்தம் செய்து விடும்!!
TPF சந்தா (மிக சரியாக 12% பிடித்தம் செய்பவர்களுக்கு மட்டும்), CPS பிடித்தம் (ரெகுலர் மற்றும் DA நிலுவை), வீட்டு வாடகைப்படி (ஒரு சிலருக்கு) ஆகியவை மாற்றம் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!
ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் EL சரண்டர் செய்தவர்கள் அதே தேதியில் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொண்ட பின்னர் இந்த அக்டோபர் மாதத்தில்15 நாட்கள் EL சரண்டர் செய்து கொள்ள இயலும் என்பதை அறியவும்!! மேலும் தகவல் வரும்!!
நன்றி
No comments