Breaking News

அரசு ஊழியர்களுக்கு 3 தீபாவளி பரிசுகள்: டிஏ உயர்வு, அரியர், தீபாவளி போனஸ்... மொத்தம் எவ்வளவு கிடைக்கும்?


 DA Hike Latest News: மத்திய அரசு அக்டோபர் 1 ஆம் தேதி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசை வழங்கியது. ஜூலை-டிசம்பர் 2025 காலத்திற்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்தது. அரசாங்கம் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3% அதிகரித்தது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்ந்துள்ளது. 

Central Government Employees: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி

டிஏ உயர்வுக்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன்னதாக இதற்காக ஆவலுடன் காத்திருந்த 1.2 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. பண்டிகை காலத்தில் இந்த கூடுதல் பண வரவு அவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த பதிவில் 3% அகவிலைப்படி உயர்வால் ஏற்படவுள்ள ஊதிய உயர்வு பற்றி சில உதாரணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Salary Hike: லெவல் 1 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும்?

- நிலை-1 இல் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000. 
- 3% அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வால் மாதத்திற்கு ரூ.540 அதிகரிக்கும். 
- அதாவது நிலை-1 ஊழியர்களுக்கு இப்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் (ரூ.18,000 இல் 58%) மொத்த அகவிலைப்படி மாதத்திற்கு ரூ.10,440 ஆக இருக்கும்.

Pension hike: ஓய்வுதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

- இதேபோல், குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்திற்கு ரூ.270 கூடுதலாக ஓய்வூதியம் கிடைக்கும்.
- இதன் மூலம் மொத்த ஓய்வூதியம் ரூ.5,220 ஆக உயரும்.

DA Arrears: ஜூலை முதல் டிஏ அரியர் தொகை கிடைக்கும்

அரசு அளித்துள்ள இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலில் இருக்கும். அதாவது அக்டோபரில் பெறப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகையும் அடங்கும். லெவல் 1 ஊழியர்கள் மூன்று மாத நிலுவைத் தொகையாக ரூ.1,620 (ரூ.540 x 3) பெறுவார்கள்.

Diwali Bonus: அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு

அரசு தீபாவளி போனசுக்கான அறிவிப்பையும் அளித்துள்ளது. மத்திய அரசு குரூப் சி மற்றும் கெசட்டட் அல்லாத குரூப் பி ஊழியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான "அட்-ஹாக் போனஸ்" பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தத் தொகை ரூ.6,908 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அனைத்து ஊழியர்களும் இந்த போனஸைப் பெற மாட்டார்கள். மார்ச் 31, 2025 நிலவரப்படி பணியில் இருந்து, குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமே இந்த போனஸுக்குத் தகுதியுடையவர்கள். ஆண்டு முழுவதும் வேலை செய்யாத ஊழியர்கள் விகிதாசார அடிப்படையில் போனஸைப் பெறுவார்கள்.

லெவல் 1 ஊழியருக்கு மொத்தப் பலன் எவ்வளவு?

- நிலை-1 ஊழியர்களை மட்டும் கருத்தில் கொண்டால், அக்டோபரில் அவர்களுக்கு ரூ.8,528 கூடுதல் பலன் கிடைக்கும்.

- இதில் ரூ.1,620 டிஏ நிலுவைத் தொகை மற்றும் ரூ.6,908 போனஸ் ஆகியவை அடங்கும். 

- கூடுதலாக, அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.540 நிரந்தர உயர்வைப் பெறும்.

DA Hike: 7வது சம்பளக் குழுவின் கடைசி டிஏ உயர்வு

ஜுலை 2025 -க்கான டிஏ உயர்வு 7வது சம்பளக் குழுவின் கடைசி டிஏ உயர்வு ஆகும். ஏனெனில் அதன் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகின்றன. இப்போது, ​​ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவை எதிர்நோக்குகிறார்கள். அரசாங்கம் ஜனவரி 2025 இல் 8வது சம்பளக் கமிஷனை அறிவித்தது, ஆனால் அதன் குறிப்பு விதிமுறைகளோ அல்லது அதன் உறுப்பினர்களின் நியமனமோ இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

ஜூலை 2025 டிஏ உயர்வு: சுருக்கமாக...

- லெவல் 1 முதல் லெவல் 18 வரை அனைத்து நிலைகளிலும் அகவிலைப்படி அதிகரிப்பு, சம்பளத்தில் கணிசமான உயர்வை ஏற்படுத்தும்.

- இதற்கிடையில், குரூப் C மற்றும் கெசட்டட் அல்லாத குரூப் B ஊழியர்கள் கூடுதல் போனஸையும் பெறுவார்கள். 

- டிஎ உயர்வுக்கான அரியர் தொகையும் கிடைக்கும்.

- இவை அனைத்தும் பண்டிகை நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிதி நிவாரணத்தை அளிக்கும்.

 

 

No comments