அடி தூள்!! ரூ.60,000 அடிப்படை ஊதியம் 8வது ஊதியக்குழுவில் எவ்வளவு உயரும்? மாதம் ரூ.2,09,664:
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். புதிய சம்பளம் எவ்வாறு கணக்கிடப்படும்? இந்த முறை அரசாங்கம் முற்றிலும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்துமா? அல்லது 7வது ஊதியக்குழுவில் பயன்படுத்தப்படும் சம்பள மேட்ரிக்ஸ் முறையையே அரசு இப்போதும் பின்பற்றுமா? சம்பள உயர்வை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் எந்த அளவில் தீர்மானிக்கப்படும்? இப்படி பல கேள்விகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனங்களில் உள்ளன.
Central Government Employees: ஊழியர்களுக்கு முக்கிய தகவல்
8வது ஊதியக்குழுவில், தற்போதுள்ள சம்பள மேட்ரிக்ஸ் தொடரும் என்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மட்டும் புதிதாக இருக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பளக் கணக்கீட்டின் அடிப்படை அமைப்பு பெரிய அளவில் மாற வாய்ப்பில்லை. 7வது ஊதியக்குழுவில் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பள மேட்ரிக்ஸ் மாடலை அரசாங்கம் அதிகம் மாற்றாமல் அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஊதியத்தை திருத்த புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படலாம்.
7th Pay Commission: 18 நிலைகளை கொண்ட 7வது ஊதியக்குழு
தற்போது அமலில் உள்ள 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, சம்பள மேட்ரிக்ஸ் தற்போது 18 நிலைகளைக் கொண்டுள்ளது. இது சம்பளக் கணக்கீடுகளை எளிமையாகவும் வெளிப்படையாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய சிக்கலான சம்பள பேண்ட் மற்றும் கிரேடு பே முறையை இது மாற்றியது. இந்த மேட்ரிக்ஸ் டாக்டர் வாலஸ் அய்கிராய்டு சூத்திரத்தை (Dr. Wallace Aykroyd formula) அடிப்படையாகக் கொண்டது. இது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தைக் கணக்கிடுகிறது. பின்னர் மொத்த சம்பளம் இந்த அடிப்படை சம்பளத்தைச் சுற்றி கட்டமைக்கப்படுகிறது.
Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்?
8வது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கும் என கூறப்படுகின்றது. எனினும், தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசின் நிதிச்சுமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு பார்த்தால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 என்ற அளவில் தீர்மானிக்கப்படும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Salary Hike: குறைந்தபட்ச ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதத்திற்கு ரூ.18,000 ஆக உள்ளது. ஃபிட்மென்ட் காரணி 1.92 ஆக நிர்ணயிக்கப்படால்,
புதிய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் = ரூ.18,000 × 1.92 = மாதத்திற்கு ரூ.34,560
அதாவது, அடிப்படை சம்பளம் மட்டும் ரூ.16,500 க்கும் அதிகமாக உயரும். இதனுடன் DA (அகவிலைப்படி), HRA (வீட்டு வாடகைப் படி), TA (பயணப்படி) மற்றும் பிற கொடுப்பனவுகள் சேர்க்கப்பட்டவுடன், மொத்த சம்பளம் கணிசமாக அதிகமாகும்.
ரூ.60,000 அடிப்படை ஊதியம் ரூ.2 லட்சத்தை தாண்டலாம்
தற்போது ரூ.60,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒரு மத்திய அரசு ஊழியருக்கு (உதாரணமாக, குரூப் பி கெசட்டட் அதிகாரி) இந்த மாற்றத்தால் எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்:
- தற்போதைய அடிப்படை ஊதியம்: ரூ.60,000
- 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்ட புதிய அடிப்படை ஊதியம்: ரூ.60,000 × 1.92 = ரூ.1,15,200
- DA (55%): ரூ.63,360
- HRA (மெட்ரோ நகரத்திற்கு 27%): ரூ.31,104
- மொத்த சம்பளம்: ரூ.1,15,200 + ரூ.63,360 + ரூ.31,104 = ரூ.2,09,664
அதாவது, தற்போது மாதம் ரூ.1.10 லட்சம் சம்பாதிக்கும் ஒரு ஊழியரின் சம்பளம் 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் இருமடங்காக அதிகரித்து ரூ.2.10 லட்சத்திற்கு மேல் உயரக்கூடும்.
8வது சம்பள கமிஷன் எப்போது அமல்படுத்தப்படும்?
அரசாங்கம் இன்னும் 8வது சம்பள கமிஷனை முறையாக அமைக்கவில்லை. எனினும், 10 ஆண்டு இடைவெளி என்ற விதியின் படி, இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2028 ஆம் ஆண்டு இது அமலுக்கு வரக்கூடும் என கூறப்படுகின்றது. எனினும், ஜனவரி 2026 முதல் ஊழியர்களுக்கு அரியர் தொகை கிடைக்கும்.
2028 வரையிலான தாமதம் ஏன்?
பாரம்பரியமாக, ஒரு சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் இறுதி பரிந்துரைகளை வெளியிடுவதற்கு சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். இதன் படி பார்த்தால், 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் செயல்படுத்தல் 2028 வரை தாமதமாகலாம். எனினும், அரசாங்கம் இதற்கான செயல்முறையையும், பணிகளையும் விரைவுபடுத்தினால், 2027 ஆம் ஆண்டின் மத்தியிலும் 8வது ஊதியக்குழு முழுமையாக அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

No comments