Breaking News

பெரம்பலூரில் அரசு பள்ளியில் அசத்திய கலெக்டர்! மாவட்ட ஆட்சியரால் மாணவிக்கு நெகிழ்ச்சி :

அறிவு மற்றும் திறன்களை அளித்து, தனிமனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சமூகத்தில் ஒழுக்கம், பண்பு, நேர்மை ஆகியவற்றை வளர்க்கவும் அனைவருக்கும் கல்வி அவசியமாகிறது.. ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருப்பதே கல்விதான்.. ஒருமுறை கற்ற கல்வி, மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது.. அந்தவகையில் கல்வி கற்க ஆர்வம் காட்டிய மாணவியின் கோரிக்கையை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி நிறைவேற்றியிருக்கிறார்.

எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். நம்முடைய மாநிலத்தில் 12000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு பள்ளிகள் கட்டணம் நிர்ணயிப்பு சட்டம் 2009-கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இயக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயக்குழு (Tamil Nadu Private Schools Fee Determination Committee ) வரையறுத்துள்ள கட்டணத்தையே பின்பற்றியும் வருகின்றன. அரசு பள்ளிகள் சபாஷ் ஆனால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளும் தரத்திலும், கல்வியிலும் போட்டி போட்டு முன்னேறி வருகிறது.. பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உதவிகள், உணவு உட்பட அனைத்தையுமே நம்முடைய அரசும் செய்து தந்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே உள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. அங்குள்ள வரகுபாடி என்ற கிராமத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்.. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு ஒருவர், மாவட்ட ஆட்சியர் மிருணாளினியை சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அதில், நான் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறேன், எனக்கு அடிக்கடி உடல்நலக் குறைபாடு வந்துவிடுவதால், கைகளை திறக்க முடிவதில்லை.. இதனால் என்னுடைய கைகள் மூடியபடியே உள்ளது.. இதன்காரணமாக, நான் படித்து வரும் தனியார் பள்ளியிலும் என்னை தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை.. கடந்த ஒரு வருடமாகவே பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ஆனால் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி இதைக் கேட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், உங்கள் வீட்டுக்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறதா? எங்கு உள்ளது? என்று கேட்டார். அதற்கு மாணவி, சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது என்று அந்த மாணவி சொல்ல, உடனே உடனடியாக முதன்மை கல்வி அலுவலர்களை அழைத்த கலெக்டர், அந்த மாணவியை சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்க்க உத்தரவிட்டார். இதையடுத்து, கருதி கல்வி ஆண்டின் பாதியில் அம்மாணவி பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பத்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையை மாணவியரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார் அப்போது மாணவியை தன்னுடைய அறைக்கு அழைத்து வந்து, தனக்கருகில் உட்கார வைத்து, மாணவிக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் கலந்துரையாடினார். கோரிக்கை வைத்ததுமே அதனை உடனே நிறைவேற்றியதால், மாணவியும் பூரித்து போனார்.. இடைநின்ற மாணவியின் கல்விக்கு கரம்கொடுத்த ஆட்சியருக்கு பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்


 



No comments