8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை இந்த 5 அம்சங்கள்தான் தீர்மானிக்கும்
8th Pay Commission Salary Hike: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகளை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும். சில அம்சங்களின் அடிப்படையில் குழு தனது பரிந்துரைகளை அளிக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
>சுமார் 10 மாத நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அமைச்சரவை இறுதியாக 8வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்து. ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் பல்வேறு கொடுப்பனவுகளை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியங்களில் தேவையான திருத்தங்களையும் இது பரிந்துரைக்கும்.
8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை அங்கீகரித்த மத்திய அமைச்சரவை, 8வது ஊதியக் குழு அதன் பரிந்துரைகளை வழங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து புள்ளிகள் அல்லது காரணிகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
8வது ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இறுதியாக எவ்வளவு சம்பள உயர்வு பெறக்கூடும் என்பது குறித்த முடிவை வடிவமைப்பதில் இந்தக் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கும். மத்திய அமைச்சரவை பகிர்ந்து கொண்ட ஐந்து காரணிகள் பின்வருமாறு:
முதலாவது, நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதி விவேகத்தின் தேவை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஊதியக்குழு உறுப்பினர்கள் இவற்றை கருத்தில்கொண்டு தங்கள் பரிந்துரைகளை அளிக்கும்.
இரண்டாவதாக, வளர்ச்சி பணிகளுக்கான செலவுகள் மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு போதுமான வளங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
மூன்றாவதாக, பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதி செலவை குழு உறுப்பினர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் பரிந்துரைகளை சில மாற்றங்களுடன் மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்கின்றன. ஆகையால், குழுவின் பரிந்துரைகள் மாநில அரசுகளின் நிதியில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும் நடைமுறையில் உள்ள ஊதிய அமைப்பு, சலுகைகள் மற்றும் பணி நிலைமைகளையும் குழு கருத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பு, ஓய்வூதிய சலுகைகள் மற்றும் பிற சேவை நிலைமைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து பரிசீலனைகளை வழங்க அரசாங்கம் அவ்வப்போது மத்திய ஊதிய ஆணையங்களை உருவாக்குகிறது. அதில் தேவையான மாற்றங்கள் குறித்து ஊதிய ஆணையம் பரிந்துரைகளை வழங்குகிறது. முன்னதாக, 8வது ஊதிய ஆணையத்தை உருவாக்கும் முடிவை அரசாங்கம் ஜனவரி 2025 இல் அறிவித்தது.

 
 
No comments