இன்றைய ராசி பலன் 12 அக்டோபர் 2025 : பாஸ்கர யோகத்தால் பிரகாசிக்க உள்ள ராசிகள்:
இன்று 2025 அக்டோபர் 12, சந்திரன் ரிஷபம், மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று துலாம், விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று உருவாகக்கூடிய பாஸ்கர யோகம் காரணமாக 12 ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.இன்று 2025 அக்டோபர் 12, சந்திரன் ரிஷபம், மிதுனம் ராசியில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று துலாம், விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று பாஸ்கர யோகம் உருவாகிறது. இதன் காரணமாக 12 ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
மேஷம் ராசி பலன்

இன்று உங்கள் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், உங்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும். பணியிடத்தில் கடுமையான போட்டியை எதிர்கால வாய்ப்பு உண்டு. எனவே கவனமாகவும் சரியான திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். உங்கள் பெற்றோருக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும். இன்று வேலைக்கு முயற்சி செய்யக் கூடிய நபர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
ரிஷப ராசி பலன்

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு வீட்டில் சுப காரியங்கள் நடக்கக்கூடிய நல்ல நாள். இன்று உங்கள் காதல் துணையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் உற்சாகமாக உணர்வீர்கள். இன்று நிதிநிலை தொடர்பாக சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனையால் பணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். முதலீடு தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும்.
மிதுன ராசி பலன்

இன்று மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலையில் தேவையற்ற வாக்குவாதங்களை தெரிவிக்கவும். இல்லை எனில் மோதலாக வாய்ப்பு உண்டு. இன்று வீட்டில் சிவ நிகழ்ச்சிகள் நடக்கும் அல்லது சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று சமூகம் மற்றும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் தங்கள் தேர்வில் எதிர்பார்த்து வெற்றியை பெற கடின உழைப்பு தேவைப்படும். இன்று பணிச்சுமை குறைவாக இருக்கும். ஓய்வு கிடைக்கும்.
கடக ராசி பலன்

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடர்பான கணிசமான பணவரவு எதிர்பார்க்கலாம். இன்று அதிர்ஷ்ட பிரகாசிக்கக்கூடிய நாள். நிலுவையில் உள்ள எந்த ஒரு பணிகளும் எளிதாக முடிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடன் பிறந்தவர்களுடன் நேரம் செலவிடவும், வேலை தொடர்பாக அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் குழந்தைகளின் கல்வி தொடர்பாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்

சிம்ம
ராசி அன்பர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாள். உங்கள் தொழில்
மற்றும் வணிகம் தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. பயணங்கள்
அனுகூலமான பலன்கள் கிடைக்கும் கிடைக்கும். இன்று குடும்பத்திலும் பணியிடத்திலும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
உங்கள் துணையுடன் குடும்ப விஷயங்கள் தொடர்பாக முக்கியமான விவாதங்கள்
தெரிவீர்கள். இன்று தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவரின் உடல் நலம்
அறிய வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் சூழலையும் பிறர் கூறக்கூடிய விஷயங்களையும் மிகவும் கவனமாக அணுக வேண்டிய நாள். இன்று மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்தவும். எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கும். முதலீடு தொடர்பான விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் தேடி வரும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு பரபரப்பான நாளாக அமையும். செலவு சிறப்பான நாளுக்கு மத்தியில் உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். அதனால் மகிழ்ச்சியாக நேரம் கழியும். மாணவர்கள் படிப்பு மற்றும் தேர்வு தொடர்பான விஷயங்களில் வெற்றி பெற கூடுதல் உத்தியுடன் செயல்படவும். இன்று நீங்கள் சிறப்பான சில நபர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. அவர்கள் மூலம் சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் ஏற்படும்.
விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு வேலையில் சில குறிப்பிட்ட தக்க மாற்றங்கள் கொண்டு வரும். இன்று உங்கள் வேலை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். அதன் மூலம் வேலைகளை எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் தேவைப்படும். இது உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். மாமியார் உறவுகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மகர ராசி பலன்

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நாள். தேவையற்ற தகராறுகள் ஏற்படும். இந்த பிற்பகலுக்கு பின்னர் சாதகமான சூழல் உருவாகும். உங்கள் குடும்ப உறுப்பினர் தொடர்பான கவலைகள் ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால் கடினமான சூழ்நிலை சமாளித்து முன்னேறுவீர்கள். இன்று உங்கள் பெற்றோருக்கு பரிசு வாங்கி தர நினைத்தீர்கள். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில் தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும்.
கும்ப ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு அலுவலகப் பணிகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். சில புதிய நபர்களுடன் சேர்ந்து முதலீடு செய்ய நினைத்தால் அதை தவிர்ப்பது நல்லது. சரியான யோசனை அல்லது அவசர செயல்பாடுகளால் இழப்புகள் ஏற்படும். இன்று உங்கள் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நிதி சார்ந்த விஷயங்களில் வல்லுனர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. இன்று தொழில் தொடர்பாக நன்மைகள் ஏற்படும். இன்று உங்கள் துணைவரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
மீன ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு வேடிக்கை நிறைந்த நாளாக இருக்கும். வணிகம் தொடர்பான விஷயங்களில் பதற்றுமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் முடிவெடுப்பதில் கவனம் தேவை.. குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் கருத்தை பிறர் மீது திணிக்க வேண்டாம். உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான விஷயங்களை வீட்டில் விவாதிப்பீர்கள்.
No comments