Breaking News

TNPSC Group 2 | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு

 


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.அந்த வகையில், சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தேர்வு கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது.

குரூப் 2 பணியிடங்களுக்கு 50 இடங்கள், குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் என மொத்தம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இதற்காக தமிழ்நாடு முழுக்க சுமார் 5,53,634 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 4,18,791 தேர்வர்கள் தேர்வை எழுதினர்.டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகியவற்றுக்கான பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் தேர்வுக்கு தகுதி அடைவார்கள்.இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தேச விடைகளை தேர்வர்கள் காணலாம்.இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம்.இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments