செல்வ மகள் சேமிப்புத் திட்டம்..!! வட்டியில் மாற்றமா..? பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளுக்கு அடித்த ஜாக்பாட்..!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற முக்கியத் தேவைகளுக்கு நிதிச் சிக்கலின்றி நல்ல எதிர்காலத்தை அமைக்கவே கனவு காண்கிறார்கள். இந்த கனவை நனவாக்க மத்திய அரசு வழங்கியுள்ள ஒரு அற்புதமான திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகும். தற்போது, இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு நடுத்தர மக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.
வட்டி விகிதங்களில் மாற்றமில்லை :
சமீபத்தில் மத்திய அரசு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அறிவித்தபோது, பல நிபுணர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதங்களை நிலையாகவே வைத்திருக்கிறது. தற்போதுள்ள வட்டி விகிதங்கள் 8.2% ஆகவே தொடர்கின்றன. வட்டி விகிதங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு வருமானம் குறையாமல் இருப்பதற்கு ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை எதிர்கொள்ளும் நோக்குடன் 2015ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது ஆவதற்குள் அவரது பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கு தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தக் கணக்கைத் திறக்க முடியும் (இரட்டை குழந்தைகளுக்கான விதிவிலக்கு உண்டு).
இத்திட்டத்தில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வைப்புத் தொகையைச் செலுத்தலாம். தற்போது 8.2 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கணக்கு திறக்கப்பட்ட நாளில் இருந்து 21 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டது. பெண்ணுக்கு 18 வயதான பிறகு உயர்கல்வித் தேவைக்காகவும், திருமணம் செய்து கொண்டால் முன்கூட்டியேவும் பணத்தை எடுக்கலாம்.
இத்திட்டத்தில் செய்யப்படும் வைப்புத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், வட்டியாக ஈட்டப்படும் தொகைக்கு பிரிவு 10-இன் கீழ் முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
No comments