ATM கார்டுகளில் ஏன் 4 இலக்க பின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்!
வங்கிச் சேவைகளை ஏடிஎம்கள் எளிதாக்கியுள்ளன. இதனால், மக்கள் வங்கிக்குச் செல்வது குறைந்துள்ளது. மேலும், அவசர தேவைக்கு நீண்ட வரிசையில் வங்கியில் காத்திருந்து பணத்தை எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டின் அருகே உள்ள ஏடிஎம் சென்று மக்கள் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு ஏடிஎம்கள் வங்கி சேவைகளை எளிதாக்கி உள்ளது என்றே சொல்லலாம். ஆனால், ஏடிஎம் கார்டுகளில் ஏன் 4 இலக்க பின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதுபற்றி தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தற்போது அனைவரும் ஏடிஎம் கார்டுகள் வைத்திருக்கிறார்கள். நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து பகுதிகளில் வசிப்பவர்களும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம், நீண்ட வரிசையில் வங்கியில் காத்திருந்து பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் வங்கிச் சேவைகளை ஏடிஎம்கள் எளிதாக்கியுள்ளன. நாம் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டுகளில் 4 இலக்க பின் (PIN) நம்பர் உள்ளதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், அதில் ஏன் வெறும் 4 நம்பர்கள் மட்டும் உள்ளது என்று தற்போது பார்ப்போம்.
1925-ஆம் ஆண்டு மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவரால் ஏடி எம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை இவர் முதன்முறையாக வடிவமைத்தபோது 6 இலக்க எண்களை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தார்.
மேலும், அந்த ஏடிஎம் கார்டை அவர் தனது மனைவியிடம் பயன்படுத்த கொடுத்துள்ளார். ஆனால் அவரது மனைவியால் 6 இலக்க எண்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு வெறும் 4 எண்கள் மட்டுமே எப்போதும் நினைவில் இருந்துள்ளது.
இதனையடுத்து அவர் ஏடிஎம் கார்டில் 4 இலக்கங்களை மட்டும் அமைக்க முடிவு செய்தார். இந்த 6 இலக்க எண் பாதுகாப்பானதாக இருந்தது. ஆனால், இந்த 4 இலக்க எண்கள், 0000 முதல் 9999 வரை தான் அமைக்க முடியும். இந்த 4 இலக்க எண்கள் பாதுகாப்பில்லை என்றாலும், 6 இலக்க எண்களுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும் பல நாடுகளில் 6 இலக்க எண்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் சில வங்கிகள் 6 இலக்க எண்களை பயனர்களுக்கு வழங்குகின்றன.
No comments