டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..! ONGC நிறுவனத்தில் 2,623 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC), நாடு முழுவதும் மொத்தம் 2,623 காலியிடங்களுக்குத் தொழிற்பயிற்சி வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு, B.Sc, B.Com முடித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்
பிரிவு பணியிடங்கள் எண்ணிக்கை
Northern Sector 165
Mumbai Sector 569
Western Sector 856
Eastern Sector 458
Southern Sector 322
Central Sector 253
மொத்தம் 2623
சென்னை பணியிடங்கள்
பதவியின் பெயர் பணியிடங்கள்
கணினி ஆப்ரேட்டர் 9
நிர்வாகி எச்ஆர் - ஆயில் & கேஸ் 7
தீயணைப்பு பாதுகாப்பு
மேற்பார்வையாளர் 2
தீயணைப்பு டெக்னீஷியன் 2
எலெக்ட்ரிஷியன் 3
செயலக அலுவலக உதவியாளர் 10
கணக்கு நிர்வாகி 7
காரைக்கால் பணியிடங்கள்
கணினி ஆப்ரேட்டர் 37
கணினி அறிவியல் நிர்வாகி 1
வரைவாளர் 3
எலெக்ட்ரிஷியன் 1
எலெக்ட்ரிஷியன் 11
எலெக்ட்ரிக்கல் நிர்வாகி 2
நிர்வாகி எச்.ஆர் 6
தீயணைப்பு டெக்னீஷியன் 2
பிட்டர் 13
இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 4
இன்ஸ்ட்ரூமென்ட் நிர்வாகி 3
மெக்கானிஸ்ட் 7
மெக்கானிக் 21
மெக்கானிக்கல் நிர்வாகி 7
வெல்டர் 4
கணக்கு நிர்வாகி 12
சிவில் நிர்வாகி 3
எலெக்ட்ரிக்கல் 3
இன்ஸ்ரூமெண்டேஷன் 3
மெக்கானிக்கல் 8
ஸ்டோர் கீப்பர் 2
மொத்தம் 153
விண்ணப்பதாரர்கள் பின்வரும் துறைகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்:
10ம் வகுப்பு / ITI / Diploma / B.Com / B.Sc / Graduate Degree (Engineering/Science/Commerce)
வயது வரம்பு
இந்நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 24 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 06.11.2001 மற்றும் 06.11.2007 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவரா இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு உண்டு.
சம்பள விவரம்
Graduate Apprentice ₹12,300/-
Diploma Apprentice ₹10,900/-
Trade Apprentice (10th/12th) ₹8,200/-
Trade Apprentice (ITI – 1 Year) ₹9,600/-
Trade Apprentice (ITI – 2 Years) ₹10,560/-
தேர்வு முறை
தேர்வு மதிப்பெண் அடிப்படையில் (Merit Basis) நடைபெறும்.சமமான மதிப்பெண்கள் இருந்தால், அதிக வயதுடையவர் முன்னுரிமை பெறுவார்.அரசின் இன அடிப்படையிலான ஒதுக்கீட்டு விதிகள் (Reservation Rules) பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தொழிற்பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் https://ongcindia.com/ என்ற இணையதளத்தில் இதற்கான அறிவிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தொடர்ந்து, https://apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/ என்ற இணையதளங்களில் ஒஅதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் அக்டோபர் 16 முதல் தொடங்கிய நிலையில், நவம்பர் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-11-2025
No comments