தமிழ்நாடு அரசு உரிமைகள் திட்டத்தில் 1096 காலியிடங்கள்... 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்:
வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், பல்நோக்கு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் கீழ் மொத்தம் 1096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்கோட்பார் மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தவும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், உலக வங்கியின் நிதி உதவியுடன் 'உரிமைகள் திட்டம்' கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றினை அவர்கள் இருப்பிடம் அல்லது அதற்கு அருகாமையிலேயே பெறுவதை 'உரிமைகள் திட்டம்' உறுதி செய்கிறது. உலக வங்கியின் நிதி உதவியுடன் இத்திட்டம் 6 ஆண்டு காலத்திற்கு ரூ.1773.87 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்பாட்டிற்கு| கொண்டுவரப்பட்டுள்ளது.
>மாவட்டம் ஒன்றியம் வட்டார அளவில் செயல்பட்டு வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (SPMU), மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகு (DPIU) ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிட பல்வேறு காலியிடங்களுக்கு ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
No comments