Breaking News

போஸ்ட் ஆபீஸின் கிராம் சுரக்‌ஷா யோஜனா.. ரூ.35 லட்சம் வருமானம் தரும் சூப்பரான அஞ்சல் சேமிப்பு திட்டம்

 


அஞ்சல் சேமிப்புக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்க என்ன காரணம்? தினமும் ரூ.50 முதலீடு செய்தாலே, முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம் என்ன? கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் பலன்கள் என்னென்ன? குறுகிய தொகையில் அதிக லாபத்தை தரக்கூடிய இந்த திட்டத்தின் மற்ற அம்சங்கள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

பொதுமக்களின் அதிகமான நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றது அஞ்சல் துறையாகும்.. நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்காக எத்தனையோ அம்சங்களை அமல்படுத்தியிருக்கிறது. அதிலும், அனைவருக்குமான பலவிதமான சேமிப்பு திட்டங்கள் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

சூப்பரான அஞ்சல் சேமிப்பு திட்டம்

இதற்கு காரணம், அஞ்சலக சேமிப்பு என்பது, மிகவும் பாதுகாப்பானதாகவும், உத்தரவாதம் தரக்கூடியதாகவும் உள்ளது.. இதில், பணப்பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதால் நம்பகத்தன்மையும் அதிகரிக்கிறது. எனவேதான், அஞ்சல் சேமிப்புகளில் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பொதுமக்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்தவகையில், கிராம் சுரக்‌ஷா யோஜனா.. அட்டகாசமான திட்டத்தை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம். போஸ்ட் ஆபீஸ் கிராம் சுரக்‌ஷா யோஜனா திட்டம் என அழைக்கக்கூடிய இந்த சேமிப்பு திட்டமானது, குறுகிய தொகையில் அதிக லாபத்தை தரக்கூடியது.

ரூ.50 தினமும் போதும்

இந்த திட்டத்தில், பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருட அடிப்படையில் டெபாசிட் செய்யலாம்.அதன்படி, தினமும் ரூ.50 அதாவது மாதம் 1500 ரூபாய் முதலீடு செய்தாலே, முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம் இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரையில் உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக ரூ.10 ஆயிரம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராம் சுரக்‌ஷா யோஜனா திட்டம்

ஒருவர் தன்னுடைய 19 வயதில் ரூ.10 லட்சம் கிராம் சுரக்ஷா யோஜனா வாங்கினால், 55 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும். அதேசமயம், 58 வருடங்களுக்கு மாதா மாதம் 1,463 ரூபாயும், 60 வருடங்களுக்கு 1,411 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மொத்த பாலிசித் தொகையும் அதாவது ரூ. 35 லட்சம், 80 வயதை நிறைவு செய்யும் போது, தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யும் பயனாளியிடம் ஒப்படைக்கப்படும்.

எனினும், இந்த தொகையை முன்கூட்டியே கோருவதால், 55 வருட முதலீட்டில் ரூ.31 லட்சத்து 60 ஆயிரம், 58 வருட முதலீட்டில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரம், 60 வருட முதிர்வு காலத்தில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் லாபமாக பெறலாம்.

கடன், போனஸ் வசதி

இந்த கிராம் சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் கடன் வசதியும் உண்டு.. என்றாலும் 4 வருடங்கள் கழித்த பிறகுதான், கடன் கிடைக்கும். 5 வருடங்கள் கழித்து இந்தத் திட்டத்தில் போனஸ் உண்டு..

ஒருவேளை பாலிசிதாரர் இந்த திட்டத்திலிருந்து விலகி சரண்டர் செய்ய விரும்பினால், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 3 வருடத்துக்கு பிறகு சரண்டர் செய்யலாம்.கிராமப்புற மக்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டம் என்பதால்தான், கிராம சுரக்ஷா யோஜனா திட்டமானது, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களிலேயே மிகவும் பிரபலமானதாக திகழ்ந்து வருகிறது.

No comments